தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை! முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கோரிக்கை

வத்திக்கான் பிரதிநிதிகள் கோத்தபாயவை சந்திக்க உள்ளனர்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 01:37.29 AM GMT ]
வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கான் பிரதிநிதிகள், பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான ஆரம்ப கட்ட பணிகளை பூர்த்தி செய்வதே வத்திக்கான் பிரதிநிதிகளின் விஜயத்திற்கான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதேவேளை, வத்திக்கான் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்திக்க உள்ளனர்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் குறித்து இந்த பிரதிநிதிகள் அமைச்சர் பீரிஸூடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பாப்ரசரின் இலங்கை விஜயம் உறுதி எனவும் திட்டமிட்டபடி இந்த விஜயம் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் ஊடக அறிக்கை மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXis7.html
முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை! முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 01:30.39 AM GMT ]
கல்முனையில் முஸ்லிம் மக்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
திகாமடுல்ல மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் தேர்தல் தொகுதிகளையும் ஒன்றிணைத்து தனியான ஒர் நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
கல்முனையில் இந்த மாவட்ட நிர்வாகக் காரியாலயத்தை அமைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலளார் ஹசன் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை ஆட்சியை நிறுவும் போது அரசாங்கம் சில வாக்குறுதிகளை அளித்திருந்தது என ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனினும், அந்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டச் செயலகத்தில் தமிழ் மொழியில் கருமங்களை ஆற்றும் தனியான பிரிவு உருவாக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளின் பின்னர் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறெனினும் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXis6.html

Geen opmerkingen:

Een reactie posten