[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:12.48 AM GMT ]
அதே போல் இந்தியா உயர் நீதிமன்றம் வெளிநாட்டு வங்கி கணக்கு வைத்திருப்போரின் பெயர் விபரத்தை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கு அந்நாட்டு அரசு பணிந்து செயல்படுகின்ற அளவிற்கு நீதித்துறையின் சுதந்திர தன்மை பேணப்படுகின்றது.
இந்த முறையை தான் இலங்கையர்கள் இந்த நாட்டிலும் செயல்படுத்த ஏங்குகின்றனர் இவ்வாறு பாராளுமன்றத்தில் நேற்று விஜயதாச எம் பி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhxz.html
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:08.16 AM GMT ]
வரவு செலவுத்திட்டத்தின் கீழான பாதுகாப்பு அமைச்சிற்கான நிதியொதுக்கீடு தொடர்பான வாசிப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிதியொதுக்கீட்டுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது.
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான 7 மசோதாக்களில் 103 இலக்க மசோதா வாக்கெடுப்பு இன்றி நிறைவேறக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதனையடுத்து இது தொடர்பான வாசிப்பின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 115 வாக்குகளும்,எதிராக 12 வாக்குகளும் கிடைத்திருந்தன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhxy.html
கிழக்குப் பல்கலை மாணவர்கள் மோதல்: 8 பேர் காயம்- ஹற்றனில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 05:20.57 AM GMT ]
பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்று மாலை இந்த மோதல் சம்பவம் பதிவாகியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மோதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹற்றனில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
04.11.2014 அன்று பெய்த மழையினாலும் வீசிய பலத்த காற்றினாலும் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததால் ஆய்வு கூடம் சேதமடைந்ததோடு அதில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 3 மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் ஹற்றன் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியை பெற்று 04.11.2014 அன்று பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
எனினும் 05.11.2014 அன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் நிர்மலா பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
அத்தோடு பாடசாலைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்படும் மரங்களை வெட்டுவதற்கு வனதுறை அதிகாரிகளுக்கு தான் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw6.html#
Geen opmerkingen:
Een reactie posten