தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

மரண தண்டனை பெற்றுள்ள தமிழக மீனவர்கள் உரியமுறையில் விடுவிக்கப்படுவர்: தமிழக முதல்வர்

நாடாளுமன்ற நீடிப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு இல்லை: அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:29.03 AM GMT ]
தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவ்வாறான செயற்பாடு ஒன்று தொடர்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் ஒருவர் இந்த சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தெளிவாக்கிய அமைச்சர் அது அவரின் சொந்தக்கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp3.html

நல்லூர் பிரதேச சபையால் சனசமூக நிலையங்களுக்கு நன்கொடை
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:33.23 AM GMT ]
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சன சமூக நிலையங்களுக்கான நன்கொடைகளை வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 29ம் நாள் திருநெல்வேலியில் நடைபெற்றது.
நல்லூர் பிரதேச சபை தலைவர் ப.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக பா.உறுப்பினர் சி.சிறீதரன், கௌரவ விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட தலைவர்  பெ.கனகசபாபதிப்பிள்ளை, சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மலர்மகள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் இராசலிங்கம் ஆகியோருடன் நல்லூர் பிரதேச சபை செயலாளர் திருமதி.தி.அன்னலிங்கம் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp4.html
தேர்தல் என்றாலும் பாப்பரசர் இலங்கை வருவார்: திருகோணமலை ஆயர்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:06.01 AM GMT ]
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் பரிசுத்த பாப்பரசரின் விஜயம் திட்டமிட்டப்படி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வந்துள்ள குழுவினருக்கும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது தேர்தல் ஒன்று தொடர்பில் பேசப்படவில்லை, ஏனெனில் தேர்தல் திகதி ஒன்று இன்னும் அறிவிக்கப்படாமையாலாகும்.
இந்தநிலையில் பாப்பரசர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் நாடு இயல்புக்கு திரும்ப அந்த நாட்கள் போதுமானதாக இருக்கும் என்றும் ஆயர் சுவாம்பிள்ளை குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் பாப்பரசரின் விஜயம் காரணமாக தேர்தலில் யாருக்கும் சாதகம் ஏற்படப் போவதில்லை, பாதகமே ஏற்படும் என்று ஆயர் கருத்துரைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp6.html

மலையக அரசியல் தலைமைகள் மறுமலர்ச்சிக்கான பாதையை திறக்க முயல வேண்டும்: சிறீதரன் எம்பி
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:14.51 AM GMT ]
மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாரிய மண்சரிவினால் புதையுண்டுபோன கொஸ்லாந்த, மீரியபெத்த போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தை சேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் உட்பட பலர் சென்றிருந்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
மலையக சொந்தங்களின் வாழ்கையில் இந்த சம்பவம் ஒரு மாறுதலை தரவேண்டும்.
இந்த மக்கள் பற்றிய சிந்தனையில் அரசாங்கமும் மலையகத்தை நிர்வகிக்கும் அரசியல் தலைமைகளும் மறுமலர்ச்சிக்கான பாதையை திறப்பதற்கு முயலவேண்டும்.
காலதிகாலமாக கொத்தடிமைகளாகவே வாழுகின்ற இந்த மக்களுக்கு லயன் வாழ்க்கை மாறி அவர்களுக்கு நிரந்தரமானதும் பாதுகாப்புமான வீட்டுவசதிகள் வாழ்வு ஏற்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
இன்று மண்சரிவினால் ஏற்பட்ட ஏழை மக்களின் மரணம் தம் எதிர்கால சந்ததிக்கான தியாகமாக கருதப்பட்டு, அவர்களின் நினைவுகள் சுமந்து மலையக சொந்தங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் துரிதமாக ஒரு சுபீட்சமான மலையக வாழ்வு நோக்கி சிந்தித்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp7.html
மரண தண்டனை பெற்றுள்ள தமிழக மீனவர்கள் உரியமுறையில் விடுவிக்கப்படுவர்: தமிழக முதல்வர்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 03:22.55 AM GMT ]
உரிய நீதிமன்ற அனுகுமுறைகளின்கீழ் இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் உறுதியளித்துள்ளார்.
ஐந்து மீனவர்களினதும் குடும்பத்தினரிடம் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து மீனவர்களின் குடும்பத்தினரும் நேற்று முதலமைச்சரால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உண்மைநிலைமை புரியவைக்கப்பட்டது.
இதன்பின்னர் வெளிவந்த மீனவர்களின் குடும்பத்தினர் தமக்கு முதலமைச்சரால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்ட இந்த மீனவர்கள் மீது இலங்கை படையினர் போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டை சுமத்தினர்.
இதற்காகவே கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியன்று கொழும்பு மேல்நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை விதித்தது
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhqy.html

Geen opmerkingen:

Een reactie posten