[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 04:54.23 AM GMT ]
பாகிஸ்தான் வழங்கியுள்ள நிவாரணத்தின் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சுரைஸ்தீன் இந்த நிவாரணப் பொருட்களை இராணுவ அதிகாரி அம்பே பொலவிடம் கையளித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs7.html
தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்சுடன் ஏன் த.தே.கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்? ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்க கூடாதென ஒரு பகுதி முஸ்லிம் சமூகம் கூறும் இந்த சூழ்நிலையில் த.தே.கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்தையில் ஈடுபடவிருப்பது நகைப்பிற்குரிய விடயம் என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத்தெரிவித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சுரைஸ்தீன் இந்த நிவாரணப் பொருட்களை இராணுவ அதிகாரி அம்பே பொலவிடம் கையளித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs7.html
முஸ்லிம் காங்கிரஸ்சுடன் த.தே.கூட்டமைப்பு ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 04:28.02 AM GMT ]
காலத்திற்கேற்றாற் போல் வேசம் போடும் முஸ்லிம் காங்கிரஸ்சுடன் ஏன் த.தே.கூட்டமைப்பு பேச்சுக்கு செல்லவேண்டும், ஜனாதிபதி தேர்தல்தொடர்பாக தற்போது பரவலாக சூடு பிடித்துள்ள காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியை ஆதரிக்க கூடாதென்று முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜனாதிபதியை ஆதரிப்பதாக ஒரு முகத்தினையும் த.தே.கூட்டமைப்பினருடன் பேசி தமிழ் முஸ்லிம் உறவு நல்லது என்று காட்டும் ஒரு முகத்தினையும் காட்டும் மாயை நாட்டு மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கும் வேலையில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பது நகைப்பிற்குரிய விடயமாக பார்க்கவேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று த.தே.கூட்டமைப்பினருடன் சந்திப்பினை நடத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேற்று பாதுகாப்பு அமைச்சின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்கள். அதே வேளை
பசீர் சேகுதாத் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையினை இந்த த.தே.கூட்டமைப்பினர் கணக்கில் எடுக்கவில்லை ஏன்? இவர்கள் எதனை எதிர்பார்த்து பேசப்போகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் காலாகாலமாக இவ்வாரான வேலைகளில் ஈடுபடுவதுதான் அவர்களது பழக்கமாக இருந்துவருகின்றது.
இதனை தமிழ் தேசிய தலைமைகள் என்று தங்களை அடையாளப்படுத்தும் தலைமைகள் புரிந்து கொள்ளவில்லையா? அவர்கள் தமிழ் மக்களை முஸ்லிம்களிடம் தாரைவார்க்கவா அவர்களுக்கு உகந்த நேரத்தில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது சரியானதா?
முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் தங்களுக்கு சாதகமான பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றார்கள்.
அதில் ஒன்றுதான முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கல்வி அமைச்சுப்பதவியும் மற்றைய மூன்று பேருக்கு ஏனைய அமைச்சுக்களும் தரவேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றாரகள்.
இவர்கள் இவ்வாரான கோரிக்கைகளை முன் வைத்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஏன் த.தே.கூட்டமைப்பினர் இவர்களுடன் சென்று பேச்சு வார்த்தை நடத்தவேண்டும்? அப்படி என்ன தேவை த.தே.கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.
இப்போதாவது ஒரு நல்லெண்ண ஏற்பாடாக கிழக்கு மாகாணத்தை த.தே.கூட்டமைப்பினருடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க முன்வருமா? உறுதியாக அவர்கள் தமிழர்களுக்கு எதையும் கொடுப்பதற்கு தயார் இல்லை.
இதைத்தான் அவர்கள் அன்று முதல் இன்றுவரைக்கும் செய்து வருகிறார்கள். தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கும் த.தே.கூட்டமைப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ்சினரும் என்ன நல்லென்னத்தினை ஏற்படுத்துவதற்காக கூடுகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்படி பேசி எடுக்கும் தீர்மானங்களில் எப்போதாவது த.தே.கூட்டமைப்பினரின் எந்த விடயத்தையாவது கணக்கில் எடுத்த வரலாறு இருக்கின்றதா? இல்லை மாறாக ஏமாற்றப்பட்ட வரலாறே அதிகம் என்பதனை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ளவில்லையா?
எத்தனை குத்துக்கரணம் அடித்தாலும் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில் இருந்து சற்றும் விலகாது என்பது மாத்திரம் உறுதியான உண்மை, இதுதான் வரலாறு கண்ட பாடம் என்பதனை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் புரிந்து கொண்டு தமிழ் இனத்திற்கு செய்யவேண்டிய நல்ல செயல்களில் த.தே.கூட்டமைப்பினர் செயற்படவேண்டும் எனவும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgs6.html

Geen opmerkingen:
Een reactie posten