தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

கிழக்கு மாகாண உறுப்பினர்களால் கதிரைகள் கையளிப்பு- புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

கடற்படை வாகனம் வீதியைவிட்டு விலகி விபத்து! 14 பேர் காயம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 04:08.22 PM GMT ]
கடற்படையினரின் வாகனம் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் களுத்துறை மாவட்டத்தில் மீகஹகிவுள, லிஹிணியாகம என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
கடற்படையினரை ஏற்றிக் கொண்டு அதிவேகத்தில் பயணித்த வாகனமொன்றே சாரதியின் கட்டுப்பாட் டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வீதிக்கு அருகில் இருந்த வீடு ஒன்றின் மீதும் கடற்படை வாகனம் மோதியதன் காரணமாக, வீடு சேதமடைந்துள்ளது.
காயமடைந்த கடற்படையினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீகஹகிவுள பொலிசார் ,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjw7.html

மாலக சில்வாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 04:32.02 PM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா பயணம் மேற்கொண்ட தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாலக கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் டுப்ளிகேசன் வீதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் மாலக, வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுத்ததாகவும் இதனால் பெண்ணின் நண்பன் மாலகவை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
இதன் போது மாலக்கவின் பாதுகாவலர்கள் வெளிநாட்டுப் பிரஜையை தாக்கியுள்ளனர். இரண்டு தரப்பினருமே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மாலக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சீ.சீ.ரீ.வி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjxy.html
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் இணைக்க முயற்சி
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 04:42.54 PM GMT ]
மூன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்து கொள்ளும் நடவடிக்கையில், அனுபவமுள்ள ஒரு சிரேஸ்ட ஆளும் கட்சி உறுப்பினரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெற்கு, கண்டி மற்றும் குருணாகல் பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த பத்து நாட்களாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு முன்னதாக இவர்களை ஆளும் கட்சி வரிசையில் அமரச் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஆளும் கட்சியினர் சிலர் எதிர்க்கட்சிகளில் இணைந்துகொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjxz.html

கிழக்கு மாகாண உறுப்பினர்களால் கதிரைகள் கையளிப்பு- புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 05:05.50 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு கதிரைகள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), மட்டக்களப்பு கோட்டக் கல்வி அதிகாரி அ.சுகுமாரன், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
கல்குடா கல்வி வலயத்தில் இம்முறை ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து வலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கோட்டக் கல்வி பணிப்பாளர்களான நா.குணலிங்கம், எஸ்.பரமேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை கல்விக் கோட்டத்தில் 52 மாணவர்களும், ஏறாவூர் பற்று கல்விக் கோட்டத்தில் 50 மாணவர்களும், வாகரை கல்விக் கோட்டத்தில் 03 மாணவர்களும் என 105 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இம்முறை மேற்படி கல்விக் கோட்டத்தில் வரலாற்றில் முதன் முறையாக மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலயத்தில் இருந்து ஒரு மாணவி சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் வலயத்தில் அதிகூடிய 186 புள்ளிகளைப் பெற்ற செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுதாகரன் அனோஜன் என்ற மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன், மற்றும் மேற்குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களும் வலயத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjx0.html

Geen opmerkingen:

Een reactie posten