[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 06:49.06 AM GMT ]
சிறிய பொலிஸ் நிலையங்களுக்கு 300 குறுந்தட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதோடு தலைமை பொலிஸ் நிலையங்களுக்கு 500 முதல் 600 வரையான குறுந்தட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் நிலையங்களில் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எப்படியாவது இந்த குறுந்தட்டுக்களை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறுந்தட்டு ஒன்றின் விலை 300 ரூபா.
இதனடிப்படையில், இரண்டு கோடி ரூபாவை சம்பாதிப்பதற்காக 70 ஆயிரம் குறுந்தட்டுக்களை விற்பனை செய்ய வேண்டும்.
குறுந்தட்டுக்கள் அனைத்தையும் பொலிஸ் அதிகாரிகளிடம் விற்பனை செய்ய தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, ராஜபக்ஷவினருக்கு நெருக்கமான பொலிஸ் அதிகாரி என்பதுடன் ஓய்வுபெறும் வயதையும் தாண்டியுள்ள அவருக்கு மூன்று முறை பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனை துரிதமாக ஓய்வுபெற செய்து அந்த பதவிக்கு அனுர சேனாநாயக்க நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் திணைக்களத்திற்குள் பேசப்பட்டு வருகிறது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க 80 ஆம் ஆண்டுகளில் பாடிய மாகே கிரில்லி சோயா யன்னே மா என்ற சிங்கள பாடல் பிரபலமான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXju1.html
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இயற்கை அனர்த்தம் குறித்து விசேட கலந்துரையாடல்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 07:22.26 AM GMT ]
உதரணமாக கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் முழு தோட்டப் பகுதியே மூழ்கியது.
இதனால் ஏனைய தோட்டப் பகுதிக்கும் இவ்வாறான சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்கு கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று கொட்டகலை அமைச்சரின் தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடைலில் அமைச்சர் தெரிவித்ததாவது,
தோட்டப் பகுதியில் காலநிலை சீர்கேடுகளால் வருகின்ற அனர்த்தங்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் இவ்வாறான மண்சரிவுகளோ வெள்ள அனர்த்தங்களோ அறிந்து கொண்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தோட்டங்களில் உள்ள அபாயங்களை இனங்கண்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுவனத்திற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.
மாதத்திற்கு இரு தடவையாவது அரசாங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் மக்களின் பிரச்சினைகளை இணங்காண்பதற்காக தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது பொருளாதார பிரதி அசைமச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி, மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ராம் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXju3.html
சொறிக்கல்முனையில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 07:28.58 AM GMT ]
சொறிக்கல்முனை - 1 , கிராமசேவகர் பிரிவினை சேர்ந்த ரவி அனுசாந்த்(04வயது) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் காணாத நிலையில் தேடியுள்ளனர்.இந்த நிலையில் கிணற்றினை பார்த்தபோது குறித்த சிறுவன் அதனுள் கிடந்துள்ளான்.
உடனடியான அயலவர்கள் குறித்த சிறுவனை மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப தகராறு - மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை
மட்டக்களப்பு ஏறாவூர் - மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கில் இருந்து 100 பெண்கள் நாடு திரும்பினர்
மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த 100 பெண்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள், கட்டார், குவைத், டுபாய் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு திரும்பிய பெண்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்ணொருவரும் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்கள் அங்கு பாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதை உட்பட பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அமெரிக்க தூதரக அதிகாரியின் மகளை காணவில்லை
கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரின் மகள் காணாமல் போயுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தின் வீசா அதிகாரி ஒருவரின் 20 வயதான மகளே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இறுதியாக இந்த அமெரிக்க அதிகாரியின் மகள் கொழும்பு உலக வர்த்தக மையம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXju4.html
நிலச்சரிவு ஆபத்து குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை: பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 08:08.12 AM GMT ]
இப்படியான ஆபத்தான இடங்களில் இருக்கும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் எப்போதும் தயாராக உள்ளன.
சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்திற்கு ஆபத்து குறித்து முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு தெரியப்படுத்தப்படவில்லை.
உரிய முறையில் மண்சரிவு ஆபத்து இருக்கின்றது என்று தெரியப்படுத்தியிருந்தால், நாங்கள் மாற்று காணிகளை அந்த மக்களுக்கு வழங்கியிருப்போம். ஏற்கனவே அப்படி வழங்கியும் இருக்கின்றோம்.
இது சம்பந்தமான பொறுப்புகளை அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ள வேண்டும். வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் எமக்கு உதவ வேண்டும்.
தனியார் மயப்படுத்தலுடன் வீடுகள் தொடர்பான பொறுப்பு அரசாங்கத்தினுடையது. அது குறித்து ஆராய்ந்து பார்க்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. எனினும் எங்களால் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் இயலுமை இல்லை எனவும் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXju5.html
பூணாகலை முகாமிலுள்ள பாதிக்கப்பட்ட 76 பெண்களுக்கு மாற்றுடை இல்லை: ஸ்ரீகாந்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 08:12.42 AM GMT ]
அவர் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார். மக்களுடன் அளவளாவினார்.
உடுத்த உடையுடன் முகாமிற்கு வந்த இப்பெண்கள் கடந்த 3 நாட்களாக அதே உடுப்புடன் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
மேலும் 10 வயதுக்குட்பட்ட 27 சிறுமிகளுக்கும் மாற்றுடையில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் பெண்களுக்கு தேவையான சுகாதார ரீதியான உடைகள் மற்றும் பொருட்களை பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவை இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது.
அவை முகாமிலுள்ள ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலசல கூடங்களிருந்தாலும் தண்ணீர் வசதி இல்லையென்றும் கூறப்படுகிறது. பொதுவாக முகாம் நிருவாகம் பாதிக்கப்பட்டவர்கள் நலன்கருதி செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்கிறது.
ஸ்ரீகாந் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்குள்ள நிலைமைகளை அவதானித்துவிட்டு கிழக்கிற்குச் சென்று தேவையான நிவாரணப் பொருட்களுடன் மீண்டும் இங்கு வந்து வழங்க விருக்கிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXju6.html
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சீனப் பிரஜைகள்- 24 ஆண்டுகள் தங்கியிருந்த இங்கிலாந்து நபர் கைது
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 08:19.38 AM GMT ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட, சீனப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.
இவர்கள் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் மற்றும் மீண்டும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்கள் உள்ளதா என விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
எனினும் அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்காத போதும், விமான நிலையத்தில் பதற்ற நிலையை தோற்றுவிப்பது போல் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர்களது பயணப் பைகளில் இருந்து சட்டவிரோத சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி சீனப் பிரஜைகள் ஐவரையும் மீண்டும் சீனாவுக்கே அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் தீர்மானித்தனர்.
வந்த விமானத்திலேயே அவர்களை ஒப்படைக்க முற்பட்ட போது, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விமானத்தினுள் பதற்ற நிலையை தோற்றுவிப்பது போன்று நடந்து கொண்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஐவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக 24 ஆண்டுகள் தங்கியிருந்த இங்கிலாந்து நபர் கைது
வீசா அனுமதியின்றி எல்ல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 65 வயதான நபர் எனவும் அவர் சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்திருந்தாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணியாக வந்த இந்த நபர் கடந்த 24 வருடங்களாக வீசா அனுமதியின்றி இலங்கை வசித்து வந்துள்ளதாக எல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இலங்கையில் பல பாகங்களில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXju7.html
Geen opmerkingen:
Een reactie posten