தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

இராணுவ நிகழ்ச்சி நிரலில் சண் வாத்தி தலைமறைவு

இவரை ஒரு தமிழ்த் தேசிய வாதியாகவும் தமிழ் மக்கள் மீது பற்றுள்ளவராகவும் தன்னை மக்கள் மத்தில் காட்டிக் கொண்டு இலங்கை அரச புலனாய்வுடன் மிக நெருக்கமாக தமிழ் இனத்திற்கு எதிரான பல நாசகார வேலைகளில் ஈடுபட்ட வருகின்றமை பலர் அறிந்துள்ளனர் பலர் அறியவில்லை

வவுனியாவில் இயங்கிவரும் புலனாய்வுத் துறையின் அதிகாரியான ஆனந்த என்பவருடன் மிக நெருக்கமாக பழகி வருவதுடன் அவரின் நிகழ்ச்சி நிரலிலே தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தைஏற்டுத்த நல்லவராக நடித்து தமிழ் இனத்தை பழி தீர்க்க ஆரம்பித்து விட்டார்
இன் நிகழ்ச்சி நிரலின் ஒரு வெளிப்பாடே ஐ.நா படிவ விவகாரம் அதனடிப்படையில் ஒன்றும் அறியாத கிருஸ்ணராஜாவிடம் படிவங்களைக் கொடுத்து அதனை புலனாய்வுத் துறைக்கும் துள்ளியமாக வழங்கியவர் சண் மாஸ்ரர் என முக்கிய வட்டாரங்களில் செய்தி கசிய ஆரம்பித்துள்ளதுடன் இதன் பின்னனியில் முக்கிய அரசியற் கட்சி ஒன்று செயற்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக தொடர்ச்சியாக தமிழ் இனத்திற்கு ஆபத்து வரும் வேளையில் எல்லாம் நல்லவர்களாக நடித்து பல தமிழர்கள் தமிழர்களை ஏமாற்றுவது காலாகாலங்களில் நடப்பதும் தமிழ் இனம் அவஸ்தைப் படுவதும் தொடர் கதையாக உள்ளது
ஒழித்து விளையாடும் சண் மாஸ்ரர் தனது கைப்பட ஆபத்து என மீண்டும் புரளியை ஏற்படுத்தியுள்ளார் கீழ் வரிகள் அதற்குச் சான்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா அமைப்பாளர் எனக் கூறிவரும் சண் மாஸ்ரர் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அலவ் பிள்ளே விஜேந்திரகுமார் எனப்படும் சண் மாஸ்டர் என்ற நபரே இவ்வாறு தலைமறைவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு போலியான தகவல்களை வழங்கியதாக சண் மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான படிவங்களை வைத்திருந்ததாகவும், வெற்றுப் படிவங்களில் கையொப்பங்கள் திரட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இவ்வாறான ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி கிருஸ்ணராஜா என்பவரிடம் நடத்திய விசாரணைகளின் போது, சண் மாஸ்டருக்கு இந்த சூழ்ச்சியில் தொடர்பு இருக்கின்றமை கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சண் மாஸ்டர் கொழும்பு அல்லது புறநகர் பகுதியொன்றில் தலைமறைவாக இருக்கக் கூடுமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சண் மாஸ்டரே தகவல்களை திரட்டுமாறு தமக்கு அறிவுறுத்தல் விடுத்ததாக கிருஸ்ணராஜா குறிப்பிட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்த போதும் சண் மாஸ்டர், கிருஸ்ணராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/85625.html

Geen opmerkingen:

Een reactie posten