யாழ் கச்சேரியில் பேஸ்புக் விளையாடிய பெண் அலுவலா் அகப்பட்டார்
http://www.jvpnews.com/srilanka/85001.html
கிளிநொச்சி விதைநெல் திருட்டில் EPDP
மனிதாபிமான அமைப்பாகவும் நடுநிலையாகவும் அரசியல் பேதமற்று இயங்குகின்ற கொள்கையுடைய அமைப்பாக அறியப்படுகின்ற சர்வதேச செஞ்சிலுவை சங்க அமைப்பை பயன்படுத்தி விதை நெல் வழங்கும் பயனாளிகள் தெரிவில் ஈ.பி.டி.பியோடு தருமபுரத்தில் இருந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் செல்வம் என்பவர் தலைநுழைத்து அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளார். ஜ.சி.ஆர்.சியின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் ஏழை விவசாயிகள் ஏராளம் பேரை புறக்கணிக்கும் வகையிலும் பனாளிகள் தெரிவை மேற்கொண்டு பெருமளவிலான விதை நெல் மோசடியை ஈ.பி.டி.பி செய்துள்ளதாக தருமபுரம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஈ.பி.டி.பி சார்பாக இந்த மோசடி வேலையை செய்த செல்வம் என்பவர் விதை இரண்டு லோட் விதை நெல்லினை விவசாயிகளுக்கு கொடுக்காது ஏற்றிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரட்சி நீங்கி மழை பெய்து வரும் நிலையில் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நெல் விதைக்காக காத்திருந்த ஏழை விவசாயிகளின் வயிற்றில் ஈ.பி.டி.பி அரச அதிகாரத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/85005.html
Geen opmerkingen:
Een reactie posten