தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

இலங்கையில் ஜனநாயகமே கிடையாது: சத்தியம் செய்கிறார் சம்பந்தன்



கமலேஷ் சர்மா – சந்திரசிறி சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 07:23.59 AM GMT ]
இலங்கை சென்றுள்ள பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா இன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
இதன்போது வடமாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு  இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சந்திப்பின் போது வட பகுதியில் யுத்தத்தின் பின் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து மதியம் 1.30க்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் சிவில் சமூகத்தினரை சந்திக்கவிருப்பதாகவும்,அதன் பின் இந்தியா வீட்டுத்திட்டத்தினையும் பார்வையிட இருப்பதாக தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt5.html
நாங்கள் அரசாங்கத்தை நேசிப்பவர்கள்! மாகாண அமைச்சர் உதய கம்மன்பில
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 07:25.03 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஹெல உறுமய கட்சி நேசிப்பதாக அதன் முக்கியஸ்தரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்றைய மவ்பிம பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கொப்ப தேர்தல் நேரத்தில் தான் எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதன் காரணமாகவே நாங்களும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம்.
ஆனாலும் நாங்கள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை நேசிப்பவர்கள். இந்த அரசாங்கம் தொடர்ந்திருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம்.
எனினும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில்தான் நாங்கள் தைரியமாக அரசாங்கத்துடன் இணைந்திருக்க முடியும். அதே நேரம் அரசாங்கத்தை விட்டு விலகும் எண்ணம் எங்கள் கட்சிக்கு இல்லை.
மக்கள் எங்களை அரசியல் நடிகர்கள் என்று முத்திரை குத்திவிடக் கூடாது. அவ்வாறு நாங்களும் எங்கள் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள மாட்டோம் என்றும் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt6.html

இலங்கையில் ஜனநாயகமே கிடையாது: சத்தியம் செய்கிறார் சம்பந்தன்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 08:00.53 AM GMT ]
இலங்கையில் ஜனநாயகம் என்பது மருந்துக்குக் கூட கிடையாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய மவ்பிம சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்க்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
இலங்கையில் நீதித்துறை, தேர்தல் உட்பட எந்தவொரு துறையும் சுயாதீனமாக இயங்க முடியாது.
உலகில் எந்தவொரு நாட்டிலும் நீதித்துறையின் தலைமை நீதிபதியாக அரசியல் தகுதியை வைத்து யாரும் நியமிக்கப்படுவதில்லை, ஆனால் இலங்கையில் அவ்வாறு நடக்கின்றது.
ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான வாக்காளர்களுக்கு இங்கே எந்தவித அதிகாரமும் கிடையாது, தேர்தல் காலத்தில் வாக்களிப்பது மட்டுமே அவர்களின் பணி, அதன் பின் அதிகாரம் வேறு ஒரு இடத்தில் மட்டுமே குவிந்திருக்கும்.
உண்மையில் இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் கிடையவே கிடையாது.
இலங்கையின் இவ்வளவு சீர்கேடுகளுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே அடிப்படையாக உள்ளது. இதனை ரத்துச் செய்ய வேண்டும்.
தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிடப்பட்டால் நிறைவேற்று அதிகார முறையை ரத்துச்செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார. ,நாங்கள் அந்தக் கோரிக்கையை எப்போதும் வலியுறுத்துவதில்லை.
உள்ளூராட்சி, மாகாண சபை, நாடாளுமன்றம் என எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிட்டு இலங்கையின் ஒரு அங்கம் தான் நாங்கள் என்பதை நிரூபித்துள்ளோம்.
எங்களது தேர்தல் வாக்குறுதிகளிலும் ஒன்றுபட்ட இலங்கை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
எனினும் ஒவ்வொரு மாகாண சபைக்கும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பிரிவினை ஏற்படப்போவதில்லை.
ஒன்றுபட்ட இலங்கை என்ற கோசம் தான் வலுப்படும் என்றும் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmt7.html

Geen opmerkingen:

Een reactie posten