[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 06:01.13 AM GMT ]
40 இற்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மியன்மார் கடற்பரப்பில் உள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், மியன்மார் மற்றும் பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.
படகிலுள்ள மீனவர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWltz.html
அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் திருடர்கள்: ஆளும் கட்சி எம்.பி
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 06:06.13 AM GMT ]
ஹொரணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரச சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையிடுகின்றனர்.
களவாக மரங்களை வெட்டுகின்றனர். மணல் அகழ்கின்றனர். இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிக்கின்றனர்.
மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள், ஆடம்பர மாளிகைகளில் சுகபோகமாக வாழ்கின்றனர். இதனை பார்க்கும் எமது பிள்ளைகள் அவர்களை பின்பற்ற முயற்சிக்கின்றனர்.
முன்னேற சிறந்த வழி இதுதான் என சிந்திக்கும் பிள்ளைகள் தவறான வழிகளில் செல்ல தூண்டப்படுகின்றனர் எனவும் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlt0.html
தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் வேட்பாளருக்கு ஆதரவு: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 06:36.41 AM GMT ]
மௌபிம பத்திரிகையிடம் அவர் இதனை கூறியதாக அந்த பத்திரிகை செய்து வெளியிட்டுள்ளது.
அந்த வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவா, எதிர்க்கட்சிகளில் பொது வேட்பாளரா என்பது தமக்கு பிரச்சினையல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.
எவ்வாறாயினும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குதல், போரில் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுதல் உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடிய வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு கிடைக்கலாம்.
அதேவேளை பொது வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது மாதுளுவாவே சோபித தேரருடனோ இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlt2.html
Geen opmerkingen:
Een reactie posten