தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டது! கல்விக்கு தடையேற்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படுவர்!- எஸ்.பி!

மகிந்த மீண்டும் வெற்றி பெறுவார் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள்: விமல் வீரவன்ஸ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 11:01.39 AM GMT ]
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளவே சிலர் சட்ட சிக்கல்கள் தொடர்பான வாதங்களை முன்வைத்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரப்போவதில்லை.
தேர்தல் வருவதற்கு முன்னரே எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர். இதனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என்ற சட்ட வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
அவர், போட்டியிட்டால் அது சட்டவிரோதம் என்று கூறுகின்றனர். இவர்கள்  அச்சம் காரணமாகவே சட்ட வாதங்களை முன்வைத்து இவ்வாறு தெரிவித்து வருகின்றனர்.
மூன்றாவது முறையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பது அவர்களுக்கு தெரியும்.
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளவே இவர்கள் இந்த சட்ட சிக்கல் பற்றி பேசி வருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt0.html

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டது! கல்விக்கு தடையேற்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படுவர்!- எஸ்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 11:20.49 AM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறக்கும் திகதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தின் மாணவிகள் சிலர் அங்குள்ள மாணவர்களின் விடுதிக்குள் பலவந்தமாக நுழைந்தன் காரணமாகவே அதனை மூட தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியை திறந்து வைப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று அங்கு சென்றிருந்த போது, மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் பொலிஸார் தண்ணீ்ர் தாரை தாக்குதல் நடத்தி அவர்களை கலைத்தனர்.
கல்விக்கு தடையேற்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படுவர் - எஸ்.பி. திஸாநாயக்க
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்களில் உள்ள சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பெண் விடுதியை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt1.html

Geen opmerkingen:

Een reactie posten