தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

கொள்கைக்கு விடை கொடுத்து முப்பதுவருடங்கள் ஓடிவிட்டனவா?!


தேசியத் தலைவரின் முப்பதாவது திருமண நாள் 01.10.1984

முப்பதாவது திருமண வாழ்வில் கலந்து கொண்டிருக்கும் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்த வயது இல்லாட்டியும் வாழ்க வாழ்க என வாழ்த்துறோம்.

பார் போற்றும் வீரத் திருமகனே! தமிழன் விடிவுக்காய் வந்துதித்த மாணிக்கமே! இல்லற வாழ்வில் நீ இணைந்தாலும் எமது விடிவுக்காய் வாழ்பவனே!

அண்ணா எங்களுக்காக போராட்டத்தில் உன் தோளோடு தோள் கொடுத்து எமக்காக வாழும் தாயகத்தின் பெண்களுக்குள் முதல்மையான எம் அண்ணியே! வேருன்றிக் கிளை பரப்பி பூத்துக் காய்த்து விண்ணுயர்ந்து நிழல் பரப்பும் விருட்சம் போல வாழ்வீர்கள் என வாழ்த்துகிறோம்.

(1984 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தமிழ் நாட்டில் உள்ள திருப்போரூர் இந்துக் கோவிலில் எங்கள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மதிவதனி அண்ணிக்கும் திருமணம் நடந்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

ஈழம் ரஞ்சன்

Geen opmerkingen:

Een reactie posten