[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 04:45.40 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை கலைக்குமாறு வலியுறுத்தி, மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெ.இந்திரகுமார் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டி, அதே பீடத்தினைச் சேர்ந்த மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் கலைப்பீட மாணவர்கள் குறித்த போராட்டத்தை நடத்தியிருப்பதுடன், மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் வெளிப்படையான தெரிவு செய்யப்படவில்லை. தலைவருக்கு பிடித்தவர்கள் மட்டும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
மேலும் மாணவர் ஒன்றியம் நிறுவுவது தொடர்பில் கேட்டபோது, அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என சக மாணவர்களுக்கு பொய் கூறியமை, உள்ளிட்ட சுமார் 10ற்கும் அதிகமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே மாணவர்கள் இந்தப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
போராட்டத்தின் நிறைவில் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ஆகியோருக்கும்,மாணவர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.
இதேவளை குறித்த கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு மாறாக நான் செயற்படமாட்டேன். மாணவர்களான நாங்கள் நடந்து கொள்வோம்.
எந்தவொரு அமைப்பிற்கும், நாங்கள் ஆதரவு மற்றும் அவர்களுடைய துதி பாடமாட்டோம். என பகிரங்கமாக கூறியிருந்ததுடன், குறித்த தலைவர் போரின் பின்னர் படையினரின் ஒழுங்கமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சகபாடிகளின் ஒத்துழைப்புடன் இயங்குவதாகவும் மாணவர்கள் மத்தியில் முறைப்பாடு உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfs0.html
மட்டு.கல்லடிப் பாலத்தில் பாய்ந்த காதலர்கள்: ஆண் மரணம்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 04:53.49 PM GMT ]
இன்று காலை 9.00 மணியளவில் கரடியனாறினை சேர்ந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தர்மலிங்கம் ராஜா (31) தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருடன் மீட்கப்பட்டவர் ஞானசெல்வம் வினோ (27) என்ற பெண், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfs1.html
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு சிறப்புற வாழ்த்திய பழ.நெடுமாறன் , மு.கருணாநிதி
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:28.10 PM GMT ]
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமது வாழ்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் ஜேர்மனியில் நடைபெறவிருக்கின்ற மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பழ.நெடுமாறன், மற்றும் மு,கருணாநிதி ஆகியோர் தெரிவிக்கையில்,
உலகத் தமிழினத்திற்கு அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தமிழினத்திற்கு நேர்ந்துள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என தனதறிக்கையில் பழ,நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவிடும் நவீன கலாச்சாரச் சூழல்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வெவ்வேறானவை. அந்தப் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து தமிழினத்தின் மொழி, பண்பாட்டு பின்னணி சிறிதும் சிதையாவண்ணம் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்திட வேண்டிய தருணம் வந்துள்ளது. முக்கியமான இந்தப் பிரச்சினைகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதித்து உரிய தீர்வுகளை உலகத்தமிழர்களுக்கு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன் என தனதறிக்கையில் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfs2.html
Geen opmerkingen:
Een reactie posten