தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

ஹெல உறுமயவின் யோசனைகள்: கடும் கோபத்துடன் மகிந்த நிராகரிப்பு!

ரணில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் செல்வாக்கு செலுத்துகிறார் என்பது வேடிக்கையானது: எரான் விக்ரமரத்ன
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 05:59.17 AM GMT ]
ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் விஜயத்துக்கும் விடுதலைப்புலிகளின் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமைக்கும் தொடர்பில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதியன்று ஐரோப்பிய பொது நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தடையை நீக்கியது இந்தநிலையில் குறித்த தீர்ப்புக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பிருப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அத்துடன் இலங்கையர்கள் சிலருடன் ரணில் நிற்கும் படமும் பிரசுரிக்கப்பட்டது.
இந்தப்படத்தில் காணப்படுபவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் லண்டன் பிரதிநிதிகள் என்று எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை ஒரு சிறிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவரால் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பில் செல்வாக்கு செலுத்தமுடியும் என்று அரசாங்கம் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் எரான் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmszARWKWes1.html
ஷேனுகா மீதான குற்றச்சாட்டை பீரிஸ் மறுப்பு
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 06:44.38 AM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்னவுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்துள்ளார்.
ஐரோப்பிய நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் அதற்கு உதவியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இந்தநிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
ஜெனீவாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடக் காரியாலய புனர்நிர்மாணப் பணிகளுக்கான கொந்தராத்தை விடுதலைப் புலிகளது நிறுவனமொன்றுக்கு வழங்கியதாகவே ஷேனுகா செனவிரத்ன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2009 நவம்பர் 05ஆம் திகதியே இக்கொந்தராத்து வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அமைச்சர் பீரிஸ், 2009 நவம்பர் 15ஆம் திகதியே ஷேனுகா ஜெனீவா பதவியைப் பொறுப்பேற்றதாக பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWes2.html
ஹெல உறுமயவின் யோசனைகள்: கடும் கோபத்துடன் மகிந்த நிராகரிப்பு
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 07:08.27 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அலரி மாளிகையில் நேற்று 15 நிமிட நேரமே இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லையென்றும், ஜனாதிபதி இதன்போது கடும் சினத்தோடு இருந்ததாகவும் ஹெல உறுமய கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருப்பதால் ஹெல உறுமயுடன் எதுவித உடன்படிக்கை செய்வதற்கு தற்போது நேரமில்லை எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு முதன் முதலில் சவால் விடுத்தவர் ரத்ன ஹிமியே என்று கடும் கோபத்தோடு குற்றம் சாட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு, தமது யோசனைகளை ஏற்கிறீர்களா என்று ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியிடம் வினவியபோது, அவர் அதை நிராகரிப்பதாகக் கூறி எழுந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி தமது கட்சியின் யோசனைகள் தொடர்பில் 5 நாள் காலக்கெடு விதித்திருப்பதாகவும், அதற்குள் பதிலளிப்பதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் சுசில் பிரேம்ஜெயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்‌ஷ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWes3.html

Geen opmerkingen:

Een reactie posten