[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 07:19.06 AM GMT ]
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி, வீட்டிலிருந்து புறப்பட்ட மனைவி பருத்தித்துறையிலுள்ள நண்பி வீட்டுக்குச் சென்று வருவதாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWes4.html
மட்டக்களப்பில் தீக்கிரையான நாக கன்னி ஆலயம்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 07:53.59 AM GMT ]
சந்திவெளி பாலையடித்தோணா கடலூர் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேச மக்கள் ஏறாவூர்ப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், ஆலயம் தீயினால் முற்றாக எரிந்துள்ளதாகவும் பழமையும் தொன்மையுமான இவ் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இந்து மக்களுக்கு பெரும் கவலையளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆலயம் தொடர்பாக பிரதேசத்தில் இரு குழுக்கிடையே மோதல் நிலை காணப்பட்டதாக தெரிவித்த பிரதேச மக்கள், அதன் காரணமாக ஆலயத்திற்கு தீ வைக்கபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWes6.html
Geen opmerkingen:
Een reactie posten