தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

ராம் ஜெத்மலானி அணல் பறக்கும் வாதம்: இன்னும் சற்று நேரத்தில் தெரியும் !

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமீனுக்காக காத்திருக்கிறார் ஜெயலலிதா.. தமிழகத்திலோ பட்டி தொட்டியெங்கும் அவருக்காக எத்தனை எத்தனை பிரார்த்தனைகள், போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. இது தமிழகத்தில் ஒரு அனுதாப அலையைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் பஜகவுக்கு பலத்த எதிர்பு கிளம்ப வாய்ப்பு உள்ளது. பெங்களூர் நீதிமன்றத்தில் மூத்த வளக்கறிஞர் ராம் ஜெத்மலானி கடும் வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அரச தரப்பு வக்கீல் பவானி சிங் திணறும் அளவு விவாதம் சூடுபிடித்துள்ளது. முதலாவது அமர்வு முடிவடைந்து நீதிமன்றம் பிற்பகலுக்கு தள்ளிப்போடப்பட்டது. மீண்டும் கூடவுள்ள நீதிமன்றில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதா இல்லையா என்று இன்று முடிவாகிவிடும் என்கிறார்கள் பெங்களூரில் உள்ள தமிழ் , வழக்கறிஞர்கள். இதேவேளை தாம் 100 கோடி தண்டப்பணத்தை கட்டுவிடுவதாகவும், ஆனால் அம்மாவை உடனடியாக விடுவிக்கவேண்டும் எனவும் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலதிகச் செய்திகள் கிடைக்கும் பட்சத்தில் நாம் வெளியிட உள்ளோம். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
  [ Oct 07, 2014 02:53:31 PM 

Geen opmerkingen:

Een reactie posten