[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 02:04.44 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் வழக்கு விசாரணை செய்யப்பட்டால் அந்த விசாரணைகளில் மொஹான் பீரிஸ் பங்கேற்கக் கூடாது.
அவ்வாறு பங்கேற்றால் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவேன்.
அண்மையில் ஜனாதிபதி வத்திக்கானுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.
இதன் மூலம் அவர் பக்கச்சார்பானவர் என்பது வெளிச்சமாகியுள்ளது.
எந்தவொரு காரணத்திற்காகவும் ஜனாதிபதியுடன் இவ்வாறான ஒர் விஜயத்தில் பிரதம நீதியரசர் பங்கேற்க முடியாது.
18ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும், இதனால் மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlsz.html
படகு அகதி விளம்பரத்துக்கு 23 மில்லியன் டொலர் செலவு
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 02:07.46 AM GMT ]
ஒரு வருட காலத்துக்குள் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக விசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டாம் என்ற செய்தியை தாங்கிய விளம்பரங்கள் ஒளிபரப்பாகின. பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டன.
இந்த விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவானது என்பதை அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைய அதன் அடிப்படையில் செலவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls0.html
வெளிநாட்டு புலி உறுப்பினர்கள் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சி!– துணை பாதுகாப்புச் செயலாளர்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 01:49.53 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயற்குழு அமர்வுகளின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புலிச் செயற்பாட்டாளர்களுக்கு ஐரோப்பாவிலிருந்து பணம் கிடைக்கின்றது.
இதனால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
இதன் காரணமாகவே அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை தொடர்ந்தும் அமுல்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை அரசங்கத்திற்கும், படையினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlsy.html
Geen opmerkingen:
Een reactie posten