தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

அரசு- புலிகள் கூட்டு! ஐ.தே.க. தலைவர்களை படுகொலை செய்யத் திட்டம்?

புதிய சட்டமா அதிபராக அனுர மெத்தேகொட நியமனம்?- பொலிஸ் நிலையங்கள் அரசாங்கத்தின் கட்சிக் காரியாலயங்கள்: மாதுலுவே சோபித தேரர்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 05:55.16 AM GMT ]
புதிய சட்ட மா அதிபராக சிரேஷ்ட அரச வழக்கறிஞர் அனுர மெத்தேகொட நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் இவர் மிக நீண்ட காலமாக அரச தரப்பு சட்டத்தரணியாக கடமையாற்றி வருகின்றார்.
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சா வழக்கு, பிந்துனுவெவை அப்பாவி தமிழ் சிறைக்கைதிகளின் படுகொலை வழக்கு போன்றவற்றில் இவர் அரச தரப்பு சட்டத்தரணியாக செயற்பட்டிருந்தார்.
அதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான வாதங்களை எடுத்து வைப்பதற்குப் பதிலாக அவர்கள் தப்பிச் செல்லும் வகையில் இவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
இடையில் ஆஸ்திரிய நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பான அமர்வொன்றுக்கு சென்றிருந்த அனுர மெத்தேகொட, அரச தொழிலை உதறிவிட்டு அங்கு சிறிது காலம் வசித்திருந்தார்.
பின்னர் ஜனாதிபதி மஹிந்தவின் அனுசரணையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் மீண்டும் இணைந்து கொண்டார். தற்போது சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவரது இடத்துக்கு அனுர மெத்தேகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் நிலையங்கள் அரசாங்கத்தின் கட்சிக் காரியாலயங்களாக இயங்கி வருகின்றன: மாதுலுவே சோபித தேரர்
நாட்டின் பொலிஸ் நிலையங்கள் அரசாங்கத்தின் கட்சிக் காரியாலயங்களாக இயங்கி வருவதாக கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை குளியாப்பிட்டி நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று பொலிஸ் நிலையங்கள் அரசாங்கத்தின் கட்சிக் காரியாலயம் என்ற அளவிற்கு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தில் முதலாம் தவணைக் காலத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்துசெய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணப்பொறியை அமைத்த ஐக்கிய தேசியக் கட்சியும் இதனை நிராகரிக்கின்றது.
எல்லோராலும் வெறுக்கப்படும் முறைமை யாருக்காக அமுல்படுத்தப்படுகின்றது. உலகில் எங்கும் சட்டத்திற்கு மேல் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கிடையாது.
எனினும் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சட்டத்திற்கு மேல் அதிகாரம் காணப்படகின்றது.
ஆயிரம் கொலை செய்தாலும் ஜனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வழக்குத் தொடர முடியாது. நிறைவேற்று அதிகாரம் என்பது நாடாளுமன்றம் நீதிமன்றம் அரசியல் அமைப்பு மற்றும் மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியதில்லை.
கடந்த காலங்களில் மிக அற்புதமான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ரத்துபஸ்வல சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபருக்கு தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு தண்டனையாக தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீங்களும் குற்றம் செய்யுங்கள் உங்களுக்கும் நிச்சயமாக தூதுவர் பதவி கிடைக்கும்.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு இயங்கி வருகின்றது. லஞ்சம் வாங்குகின்றார்கள் ஆனால் பிடிக்கப்படுவதில்லை.
இலங்கை போதைப் பொருளில் தன்னிறைவு அடைந்துள்ளது. ஜெயலலிதா இலங்கையில் இருந்தால் கடவுளே என்று பேசாமல் இருப்பார்.
இந்த வறிய நாட்டில் ஜனாதிபதியின் ஒருநாள் செலவு இரண்டகோடியே முப்பத்து நான்கு லட்ச ரூபாவாகும். இந்தியாவில் 27 அமைச்சர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இலங்கையில் விவசாயத்திற்கு மட்டும் 23 அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.
உச்சநீதிமன்றம் சட்ட மா அதிபர் திணைக்களம் போன்ற ஜனாதிபதியின் கீழ் இயங்கி வந்தால் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? அனைத்து சக்திகளும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க இணங்கியுள்ளன என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew3.html
மட்டு.ஊறணி விபத்தில் ஒருவர் பலி- கிளிநொச்சி விபத்தில் சிறுவன் பலி
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 06:04.35 AM GMT ]
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் அம்புலன்ஸ் வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 9.00மணியளவில் மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் ஊறணி சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாவடிவேம்பு வைத்தியசாலையில் இருந்து வந்த அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சின்னஊறணியை சேர்ந்த மைக்கல் (49வயது),டானியல் (44வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரில் டானியல் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கிளிநொச்சி விபத்தில் சிறுவன் பலி
கிளிநொச்சி ராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஒட்டிச் சென்ற நபருக்கு அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால், மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி புரண்டத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்களை ஓட்டிச் சென்ற நபரும் அவரது இரண்டரை வயதான மகனும் விபத்தில் படுகாயமடந்துள்ளனர்.
இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew4.html
மஹஜன எக்சத் பெரமுண தொடர்ந்தும் மஹிந்தவுக்கு ஆதரவு?
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 06:06.09 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க மஹஜன எக்சத் பெரமுண கட்சி தீர்மானித்துள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுணவின் உயர்மட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று நேற்று கிரிபத்கொடையில் நடைபெற்றது. இதன்போது தொடர்ந்தும் மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் மஹஜன எக்சத் பெரமுண வலியுறுத்தியுள்ளது.
அதற்குப் பதிலாக விருப்பு வாக்கு முறை தேர்தல் முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. விருப்பு வாக்கு முறைத் தேர்தலில் மோசடிகள் நடைபெறுவதாகவும், அதற்குப் பதிலாக தொகுதி வாரித் தேர்தல் முறையானது முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew5.html
அரசு- புலிகள் கூட்டு! ஐ.தே.க. தலைவர்களை படுகொலை செய்யத் திட்டம்?
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 06:17.01 AM GMT ]
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கூட்டிணைந்து ஐ.தே.க. தலைவர்களை படுகொலை செய்வதற்கான திட்டமொன்றைக் கொண்டிருப்பதாக அக்கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஐ.தே.க. வின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரவி கருணாநாயக்க மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அரந்தலாவை பிக்குமார் படுகொலை, தலதா மாளிகைத் தாக்குதல் போன்றவற்றில் தொடர்புடைய புலிகளின் தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் அனுசரணையில் சுகபோகமாக இருக்கின்றார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் நடைபெற்ற புலிகளுக்கு எதிரான வழக்கின் போதும் அரசாங்கம் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை.
இந்நிலையில் அரசாங்கமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் கூட்டிணைந்து செயற்படுவது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் எமது கட்சியின் தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எமது கட்சித் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் தொடர்ந்தும் எம்மை எதிர்க்கட்சியில் வைத்திருக்கு இருதரப்பினரும் கூட்டிணைந்து சதி செய்கின்றனர் என்றும் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWew6.html

Geen opmerkingen:

Een reactie posten