தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு நாளை ஆரம்பம்: மாவை மற்றும் சிறீதரன் உட்பட பலர் வாழ்த்து!

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூஜை நடாத்த பிரதேச செயலாளர் மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 09:14.05 AM GMT ]
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழாவின் இறுதிநாளான இன்று  பூசை நடாத்துவதற்கு பிரதேச செயலாளர் மறுத்துள்ளதாக இங்கு தொழில் புரியும் உத்தியோஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி விழாவின் இறுதிநாளான இன்று  பூசை நடாத்துவதற்காக வேண்டி இந்து சமயத்தினைச் சேர்ந்த ஒவ்வொரு உத்தியோஸ்தர்களிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு விழாநடத்துவற்காக வேண்டி மண்டபத்தினை கேட்டபோது இங்கு இவ்வாறான பூசைகள் செய்யமுடியாது என பிரதேச செயலாளர் மறுத்துள்ளதாக  உத்தியோஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உத்தியோஸ்தர்கள் கருத்துக்கூறுகையில்,
தாங்கள் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இவ்வாண்டு சரஸ்வதி பூசை செய்யவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட இந்து சமயத்தினை சேர்ந்த உத்தியோஸ்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு பூசை செய்வதற்கான மண்டபத்தினை கேட்டபோது அதனை தர முடியாது என பிரதேச செயலாளர் மறுத்துவிட்டார்.
இன்று இலங்கையிலே பல பாகங்களிலும் குறிப்பாக பாராளுமன்றம் தொடங்கி பள்ளிக்கூடங்கள் வரையும் சரஸ்வதி விழாக்களை இன, மத பேதத்திற்கு அப்பால் சென்று அனைவரும் கலந்துகொண்டு கொண்டாடுவது வழமையான விடயமாகும் இவடவாரான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நாட்டிலே சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மாத்திரம் அதனை தடுத்து நிறுத்துவதற்கான காரணம் என்ன என்று பரியாத புதிராகவே இருக்கின்றது.
இந்த பிரதேச செயலகத்தில் முஸ்லிம் இனத்திற்கு உரித்தான அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது அதனை இந்துக்களாகிய நாங்கள் தடுக்கவில்லை ஆனால் அனைவரும் அனைத்து இடங்களிலும் கொண்டாடும் சரஸ்வதி விழாவினை செய்யவிடாததன் பின்னனி என்னவென்று தெரியாத நிலையில் இந்துக்களாகிய நாங்கள் மிகவும் மனவேதனையுடன் இருக்கின்றோம்.
இன்று குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கச்சேரியிலும் சரஸ்வதி பூசை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் இன்னொருவருடைய மதசுதந்திரத்தினை பறித்து அவர்களுடைய கலை, கலாச்சாரத்தில் மாற்றத்தினை கொண்டுவர முனைவதன் மூலம் மற்ற மதத்தினை அவமதிக்கும் செயலாக பார்க்கவேண்டி உள்ளது.
இது விடயமாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் பிரதேச செயலகத்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகளிடத்து  தொடர்பு கொண்டு கேட்டபோது பூசை செய்வதற்கான போதிய இடவசதி இல்லாமையே பூசை செய்யவிடாதமைக்கான காரணம் என அவரிடம் பதில் கூறப்பட்டதாக எம்மிடம் தெரிவித்தார்.
எனவே இது விடயமாக உரியவர்கள் அக்கறை கொண்டு எதிர்வரும் காலங்களிலாவது எமது மத அனுட்டானங்கள் செய்வதற்கு ஆவன செய்து தருமாறு மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeqy.html
மகிந்தனாந்த அளுத்கமகே தாய், தந்தை முகத்தில் கரியை பூசியுள்ளார்: ஆனந்த அளுத்கமகே
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 09:24.15 AM GMT ]
அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மேற்கொண்டு வரும் கொள்ளையடிப்பை தான் முடிவுக்கு கொண்டு வரப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி தொகுதியின் அமைப்பாரான ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்தானந்தவின் கொள்ளையடிப்புகளை நானே முடிவுக்கு கொண்டு வருவேன்.
பாதுகாவலர்கள் இல்லாமல் வெளியில் செல்ல முடியாத மனிதன். மக்கள் வீதியில் நடந்த செல்ல விடமாட்டார்கள்.
நானும் அளுத்கம பரம்பரையை சேர்ந்தவன் என்பதால் வெட்கப்படுகிறேன்.
மகிந்தானந்த பற்றி ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளமை உண்மையே. நான் வெட்கப்படுகிறேன்.
மகிந்தானந்த தனது தாய், தந்தை முகத்தில் கரியை பூசியுள்ளார்.எப்படியான பொருளாதார பிரச்சினைகள் இருந்த போதிலும் நாங்கள் கொள்ளையடிக்கவில்லை எனவும் ஆனந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeqz.html
வடமேல் மாகாண சபைக்குள் குத்துவெட்டு! கட்சி தாவக் காத்திருக்கும் முக்கியஸ்தர்கள்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 09:39.09 AM GMT ]
ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேல் மாகாண சபைக்குள் குத்துவெட்டுக்கள் காரணமாக ஒரு சிலர் கட்சி தாவத் தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
கடந்த வருடம் நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலின் கடைசிநேரத்தில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாசிறி விஜேசேகர அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். பின்னர் முதலமைச்சர் பதவியிலும் அமர்த்தப்பட்டார்.
இதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் அதுல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கடும் கொதிப்பில் இருக்கின்றனர். மேலும் மாகாண சபையின் முக்கிய தீர்மானங்களின் போது தயாசிறி ஜயசேகர தங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை என்றும் அவர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விரைவில் கட்சி தாவ தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக ஐ.தே.க. வுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
அதிருப்தியில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவும் பட்சத்தில் வடமேல் மாகாண சபை அதிகாரம் ஐ.தே.க. வசம் மாறலாம் என்றும் கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeq1.html

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு நாளை ஆரம்பம்: மாவை மற்றும் சிறீதரன் உட்பட பலர் வாழ்த்து
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 10:03.44 AM GMT ]
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் நாளைய தினம் ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.
உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் செயற்பட்டு வருகின்றது.
இம் மாநாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அத்துடன், இம்மாநாட்டிற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு சிறப்புற வாழ்த்திய பழ.நெடுமாறன் , மு.கருணாநிதி
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமது வாழ்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் ஜேர்மனியில் நடைபெறவிருக்கின்ற மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பழ.நெடுமாறன், மற்றும் மு,கருணாநிதி ஆகியோர் தெரிவிக்கையில்,
உலகத் தமிழினத்திற்கு அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தமிழினத்திற்கு நேர்ந்துள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என தனதறிக்கையில் பழ,நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவிடும் நவீன கலாச்சாரச் சூழல்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வெவ்வேறானவை. அந்தப் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து தமிழினத்தின் மொழி, பண்பாட்டு பின்னணி சிறிதும் சிதையாவண்ணம் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்திட வேண்டிய தருணம் வந்துள்ளது. முக்கியமான இந்தப் பிரச்சினைகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதித்து உரிய தீர்வுகளை உலகத்தமிழர்களுக்கு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன் என தனதறிக்கையில் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeq2.html

Geen opmerkingen:

Een reactie posten