தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

அங்கவீனமுற்ற படையினர் அரசாங்கம் மீது கடும் அதிருப்தி [!

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற படையினர் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது சுமார் 50 ஆயிரம் படையினர் அங்கவீனமடைந்துள்ளனர்.
இவர்களில் 12 ஆயிரம் பேர் முற்றாக அங்கவீனமுற்ற நிலையில் மருத்துவரீதியாக எதுவித செயற்பாடுகளுக்கும் தகுதியற்ற நிலையில் உள்ளனர்.
அங்கவீனமுற்ற படையினரில் சிலர் ராணுவத்தின் சிவில் நடவடிக்கைககளக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர்.
எனினும் முற்றாக அங்கவீனமடைந்த படையினர் ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ஒரு லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது.
ராணுவ பணியில் இல்லாத நிலையில் மாதச் சம்பளம் வழங்கப்பட முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் 55 வயது தாண்டிய பின்னரே அவா்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அங்கவீனமுற்றுள்ள படையினர் மத்தியில் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி நிலவுகின்றது.
இது ஏனைய படையினர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeq0.html

Geen opmerkingen:

Een reactie posten