[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 11:53.15 AM GMT ]
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பிரதேசத்திலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற தனியார் பஸ், அகரகந்தை தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த 15 பேர் காயமடைந்த நிலையில், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu7.html
சுதந்திரக் கட்சிக்குள் கலகம்: அமைச்சர் பசில் செய்வதறியாது அதிர்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 11:51.31 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு சமாந்தரமாக கட்சியின் கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் கிளை அமைப்புகளை பலப்படுத்தும் நடவடிக்கை தற்போது பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆளுங்கட்சிக்குள் ஆளாளுக்கு அடித்துக் கொள்ளும் கலாசாரம் வளர்ந்துள்ளதே அதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
நீர்கொழும்பில் மாகாண அமைச்சர் நிமல் லான்சா மற்றும் பிரதியமைச்சர் சரத் குணரத்தின இருவருக்குமிடையிலான மோதல் காரணமாக அந்தத் தொகுதியின் கட்சி அமைப்புகளை பலப்படுத்தும் பணி கைவிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த சுதந்திரக் கட்சியினரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை அளிக்குமாறு கோரி வருவதால் அங்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கண்டியில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுக்கு இடையிலான மோதல் போக்கு கட்சியின் கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரத்தினபுரியில் அமைச்சர் பவித்ரா மற்றும் ஜோன் செனவிரத்தினவின் மோதல் போக்கும் அகம்பாவமும் அங்குள்ள ஏனையவர்களை ஒதுங்கி நிற்க வைத்துள்ளது.
அனுராதபுரத்தில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர் சந்திரசேன, முதலமைச்சர் ரஞ்சித் கூட்டணி மோதல் காரணமாக கட்சிக்காரர்கள் மத்தியில் அதிருப்தி தலை தூக்கியுள்ளது.
இவ்வாறாக நாடு முழுவதும் கட்சியின் கிளை அமைப்புகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறிதது அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், கட்சி முக்கியஸ்தர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu6.html
Geen opmerkingen:
Een reactie posten