[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 10:31.43 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நேற்று நிலக்கரி இறக்குமதியில் ஏற்படும் நஷ்டம் தொடர்பாக தெரிவித்திருந்தமை குறித்து பதிலளிக்கும் நோக்கில் சம்பிக்க ரணவக்க இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
இலங்கையில் நிலக்கரி மாஃபிய ஒன்று இருந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் எவ்வித அதிகாரபூர்வ விலை மனுக்கள் கோரப்படாமல் இலங்கைக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.
இது சம்பந்தமாக உரிய விசாரணைகளை நடத்தி இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu0.html
சப்ரகமுவ பல்கலைக்கழகம் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 10:40.04 AM GMT ]
இதனடிப்படையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக திங்கட் கிழமை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கற்பித்தல்கள் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களை 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய விடுதிகளுக்கு வருமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோரை இன்று பல்கலைக்கழகத்திற்கு அழைத்திருந்த நிர்வாகம், அவர்களுக்கு விளக்கங்களை வழங்கியதுடன் புதிய விடுதியை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கியது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu1.html
பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 11:19.50 AM GMT ]
வரவு செலவுத் திட்ட வாசிப்பு முடிவடைந்தவுடன் பாராளுமன்றத்தை நாளை சனிக்கிழமை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்குமாறு அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற சபாநாயகர் சபை அமர்வை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிப்புச் செய்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu3.html
சுவிஸ் கிறங்கன் சொலத்தூண் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம் பரந்தன் காஞ்சிபுரம் மக்களுக்கு உதவி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 11:37.01 AM GMT ]
சுவிஸ் அன்பேசிவம் சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ் சங்கம் ஊடாக சுவிஸ் கிறங்கன் சொலத்தூண் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கிளிநொச்சி பரந்தன் காஞ்சிபுரம் மக்களுக்கு தலா ஒவ்வொருவருக்கும் ரூபா 4 ஆயிரம் பெறுமதியான உடுபுடவைகள் உலர்உணவு அடங்கிய பொதிகளை வழங்கியுள்ளது.
நேற்று கரைச்சி கிராமத்தின் அபிவிருத்தி சங்க தலைவர் சசி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் பரந்தன் பிரதேச கட்சி அமைப்பாளர் விநாயககுமார் அன்பே சிவம் அமைப்பின் பிரதிநிதி ரஜனிகாந் கட்சியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் பிரபா மற்றும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கருத்துத்தெரிவித்த கரைச்சி பிரதேசபை உறுப்பினர் குமாரசிங்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு விதங்களில் வசதிவாய்ப்புக்கள் கிடைக்காத காஞ்சிபுரம் கிராமத்தை இந்த உதவிக்காக சுவிஸ் அன்பேசிவம் அமைப்பூடாக கிறங்கன் சொலத்தூண் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம் பா.உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் ஒத்துழைப்புடன் தெரிவு செய்தது மகிழ்சிக்குரிய விடயம்.
இந்த அன்பளிப்பை முதியோர்களும் மாற்றுவலுவுடையவர்களும் பெற்றுக்கொண்டுள்ளதும் சிறப்பானது. முன்பு எப்போது இல்லாத வகையில் போராலும் இயற்கையாலும் அண்மைய காலங்களில் எமது மக்கள் உயிர் உடல் பொருளாதார இழப்புக்களை சந்தித்துள்ளார்கள்.
அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு இப்போது கடினமான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றார்கள். இதற்கு புலம்பெயர் மக்களால் செய்யப்படும் இத்தகைய சிறிய சிறிய அன்பளிப்புக்களும் சற்று துணைபுரியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த கிறங்கன் சொலத்தூண் துர்க்கை அம்மன் ஆலயம் அண்மைய வரட்சி காலத்தின் போது பாரதிபுரம் கிருஸ்ணபுரம் போன்ற கிராமங்களுக்கு நீர்வழங்கலை மேற்கொள்வதற்கும் பேருதவி புரிந்திருக்கின்றது எனபதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுபடுத்துகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu5.html
தேரர்கள் கூட்டணி! அரசுக்கு அடிக்குமா சாவுமணி?
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 11:33.31 AM GMT ]
இவர்கள் இருவருக்குமிடையில் நேற்று இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அரசியல் அமைப்பு மாற்றம் , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் ஆகிய விடயங்களில் இணைந்து செயல்பட இரண்டு தேரர்களும் சம்மதித்துள்ளனர்.
எனினும் மாதுளுவாவே சோபித தேரர் ஜனாதிபதி முறை முற்றாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். ரத்ன தேரரோ அதிகாரக் குறைப்பு மட்டும் போதும் என்று கூறிவருகின்றார்.
எனவே இந்த விடயம் தொடர்பாக இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும் பொது இணக்கப்பாட்டை முதலில் ஏற்படுத்திக் கொள்வது என்று இரண்டு தேரர்களும் முடிவெடுத்துள்ளனர்.
அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் மாதுளுவாவே சோபித தேரரின் கூட்டிணைவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிங்கள் ஊடகம் ஒன்று, மாதுளுவாவே சோபித தேரரையும் அரசாங்கத்தினுள் இழுத்துச் செல்லும் முயற்சியின் ஆரம்ப கட்டம் இது என்று வர்ணித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu4.html
Geen opmerkingen:
Een reactie posten