தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

றிசாத் பதியூதீன்- ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் அரசியல் போர்?

சஜின் - செனுகா ஆகியோரின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்: ராஜீவ விஜேசிங்க
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:58.00 AM GMT ]
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்ன ஆகியோரின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டுமென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் வரையில் இருவரினதும் பணி இடைநிறுத்தப்பட வேண்டும்.
இருவரினதும் பணியை ஜனாதிபதி இடைநிறுத்தியிருக்க வேண்டும். அதுவே மதிநுட்பமான தீர்மானமாக அமைந்திருக்கும்.
நோனிஸ் மீதான தாக்குதல் சம்பவம் முழு நாட்டுக்குமே களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
அமைச்சு ஒன்றின் அமைச்சர், பிரதி அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இது அமைச்சின் நடவடிக்கைகளையும் ஒழுக்க கட்டுப்பாடுகளையும் செயலிழக்கச் செய்யும்.
ராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ள அனுபவம் மிக்க தகுதியானவர்களை ஒரம் கட்டி, ஜனாதிபதியை சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்த சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பத்தியொன்றில் நான் சுட்டிக்காட்யிருந்தேன்.
இந்த எதிர்வு கூறல் இன்று நிதர்சனமாகி வருகின்றது.
தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்க்கட்சி உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை விஜயம் செய்த போது, அவரை சந்திக்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு செனுகா அழுத்தம் கொடுத்தார்.
ஜனாதிபதிக்கு கோள் சொல்லி சந்திப்பை தடுக்க முயற்சித்தார். இவ்வாறானவர்களே வெளிவிவகார சேவையில் கடமையாற்றி வருகின்றனர்.
நோனிஸிற்கு எதிரான விசாரணைகள் கிடப்பில் போடபட்டால், இலங்கை அரசாங்கம் ஏனைய விசாரணைகளையும் இவ்வாறே செய்கின்றது என்ற பிழையான எண்ணக்கரு சர்வதேச ரீதியாக உருவாகக் கூடும் என ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmry.html
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பணிப் புறக்கணிப்பு - நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 02:14.17 AM GMT ]
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று காலை 6.00 மணி முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சிறைச்சாலை மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினால் சிறைச்சாலை மற்றும் நீதிமன்றங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்டுகிறது.
வெலிக்கடை, கொழும்பு, மசீன் மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைகளின் உத்தியோகத்தாகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
சிறைச்சாலை உயர்மட்ட நிர்வாகம் ஏகாதிபத்திய போக்கில் இயங்கி வருவதாகவும், புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கொழும்பு மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmrz.html
மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டை வழங்க புதிய நடைமுறை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 02:24.48 AM GMT ]
துரித கதியில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போருக்கு, மூன்று நாட்களில் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேவையான ஆவணங்களை சரியான முறையில் அனுப்பி வைக்கும் விண்ணப்பதாரிகளுக்கு இவ்வாறு அடையாள அட்டை துரித கதியில் வழங்கப்பட உள்ளது.
அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் 011-2555616 மற்றும் 011-2506458 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
இதேவேளை, விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr0.html
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இடியுடன் கூடிய மழை பெய்யுமென எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 02:44.46 AM GMT ]
தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக நாளை முதல் இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு கரையோர மாவட்டங்களின் காலநிலை பாதிக்கப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இது பின்னர் வடமேற்கு பிராந்தியத்திற்கும் பரவும் என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் அனேகமான பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும். இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்று பலமானதாக வீசும்.
பொது மக்கள் இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதத்தைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்கள் சிலவற்றிலும் இடையிடையே மழை காணப்படலாம்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்து வீசும்.
புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் அம்பாந்தோடடை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அவர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr1.html

றிசாத் பதியூதீன்- ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் அரசியல் போர்?
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 03:14.14 AM GMT ]
அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர் றிசாத் பதியூதீன் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் தற்போது அரசியல் போர் ஆரம்பமாகியுள்ளது.
இவர்களுக்கிடையில் இடம் பெற்றுவரும் அரசியல் போர் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளது.
நீண்ட நாட்களாக குறித்த இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் தோன்றி வந்துள்ளது. இந்த நிலையில் மன்னாரில் உள்ள பிரபல முஸ்ஸிம் தேசிய பாடசாலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நிகழ்வொன்று இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு 2 ஆம் நாள் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியூதீனும் சிறப்பு விருநதினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரையும் அழைக்கும் நிகழ்விற்கு காதல் ஜோடியாக செல்லும் இவர்கள் இருவரும் தனித்தனியே சென்றிருந்தனர்.
காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் குறித்த கண்காட்சிக்கு சென்று தேசியக் கொடியை ஏற்றி பின் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
மாலை 2.30 மணிக்குச் சென்ற அமைச்சர் றிசாத் பதியூதீன் இரண்டாவது தடவையாக குறித்த நிகழ்விற்கு விருந்தினராக சென்று, மீண்டும் தேசியக் கொடியை ஏற்றி பின் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களினால் முசலி பிரதேசத்தில் “ஹுனைஸ் வெற்றிக் கிண்ணம்” விளையாட்டு விழா ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த விழா இன்று முசலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு சிறப்பு மற்றும் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் துண்டுப்பிரசுரம் சுவரொட்டிகள் விதம் விதமாக ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர் றிசாத் பதியூதீன் தொடர்பில் எவ்வித அழைப்புக்களும், பதாதைகளும் வெளியிடப்படவில்லை.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் எதிர்வரும் 10-10-2014 அன்று பிரதி அமைச்சர் பதவியை ஏற்கப்போகின்றார் என்பது தொடர்பில் துண்டுப் பிரசுரங்கள் முசலியில் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவங்களை பார்க்கின்ற போது இவர்களுக்கிடையில் போர் மூண்டுள்ளமை தெரிய வருகின்றது.
இன்று முசலியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் விளையாட்டு விழா ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் அமைச்சர் றிசாத் பதியூதீனை பிரதம விருந்தினராக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இவர்கள் இருவருடைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr2.html

Geen opmerkingen:

Een reactie posten