தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

மியன்மார் கடலில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்!

வடக்கில் வசந்தம்! அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனம் செய்துள்ளது!– சம்பிக்க ரணவக்க
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:29.20 AM GMT ]
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திய அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனம் செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 தேசிய நூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “இடம்பெயர் வடக்கு கிழக்கு சிங்களவர் ஒன்றியம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் வசந்தத்தையும் கிழக்கில் உதயத்தையும் ஏற்படுத்திய அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் சிங்கள மக்களை இருட்டில் வைத்து விட்டது.
சிங்கள இனத்தை மிதித்து புலியின் தோளில் ஏறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
வடக்கு கிழக்கில் முதலில் குடியிருப்புக்களை சிங்கள மக்களே உருவாக்கினார்கள்.
அவர்கள் விரட்டியக்கப்பட்டனர். அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கங்கள் சிங்கள மக்களை உதாசீனம் செய்து வருகின்றனர்.
சிங்கள இராணுவத்தினர் வென்றெடுத்து பெற்றுக்கொடுத்த வெற்றியை மீளவும் வென்றெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை அமைச்சர் சம்பிக்க வெளியிட்டு வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியது.
தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு பாதக நிலைமையை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq3.html
தனியார் பாடசாலை மாணவர்கள் அரச பாடசாலைகளில் உயர்தரம் கற்க முடியும்! கல்வி அமைச்சு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:36.33 AM GMT ]
தனியார் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரத்தில் சித்தியெய்தியவர்களை அரசாங்க பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு அனுமதிப்பது குறித்து சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் குறித்த பிரச்சினை இந்த வாரத்தில் கடும் வாக்குவாதங்களுக்கு உட்படும் பிரச்சினையாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த சுற்றுநிருபத்தை உடனடியாக அனுப்புமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கட்டளையிட்டுள்ளார்.
எனினும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல அமைச்சர்கள் இந்த முனைப்புக்கு எதிர்ப்பை வெளிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் சர்வதேச பாடசாலைகளின் சாதாரண தர மாணவர்கள் அரசாங்க பாடசாலைகளில் உயர்தரம் கற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்த போது, அதற்கு அமைச்சர்களான மைத்திபால சிறிசேன, பசில் ராஜபக்ச, சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இது, மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று அவர் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தமது அமைச்சரவை பத்திரத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq4.html
மஹிந்த ராஜபக்சவுக்கு பின்னர் தாமே ஜனாதிபதி வேட்பாளர்!- மேர்வின் சில்வா
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:40.19 AM GMT ]
மஹிந்த ராஜபக்சவுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாமே தகுதியானவன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து தம்மை வெளியேற்ற முயற்சிக்கப்படுகிறது.
எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு பின்னர் அவரின் குடும்பத்தினரை தவிர தாமே ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவன் என்று மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தம்மை யாராவது தாக்கினால் தாமும் திருப்பி தாக்கப் போவதாக அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
தாய் தந்தையுடன் சண்டை போட்டாலும் எவனும் அவர்களை விட்டு பிரிய மாட்டான்: மேர்வின்
தாய் தந்தையுடன் சண்டை போட்டாலும் எவனும் அவர்களை விட்டு பிரிந்து செல்ல மாட்டான் என அமைச்சர் மோவின் சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் மஹர கடவத்தையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு போர் வெற்றியின் போது வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் தாய் மண்ணை முத்தமிட்டார்.
அதேபோன்று நான் இன்று மேடையை முத்தமிடுகின்றேன். நீலப்படையணி தொடர்பான இறுதி மாநாடு நடைபெறுகின்றது.
களனி பிரதேசதம் அதிஸ்டமானது என்பதனால் இறுதி மாநாட்டை நடாத்த இந்தப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடாத்த கால தாமதமானதைத் தொடர்ந்து சிலர் ஏன் உங்களக்கு வெட்டு விழுந்து விட்டதா என கேள்வி எழுப்பினர்.
ராஜபக்ச குடும்பத்தினர் வெட்டுக்காரர்கள் அல்ல, அவர்கள் எவரையும் வெட்ட மாட்டார்கள். வெட்டுவது என்றால் அரைவாசிக்கு வெட்ட மாட்டார்கள்.
டி.ஏ. ராஜபக்ச ஓர் சிறந்த மக்கள் தலைவர் அவரது பிள்ளைகளும் சிறந்தவர்கள். சில பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
மேர்வின் தற்போது ரிவர்ஸ் கியரில் பணிக்கின்றார் என சிலர் விமர்சனம் செய்கின்றார்கள். தாய் தந்தையுடன் சண்டை போட்டாலும் எவனும் அவர்களை விட்டு பிரிந்து செல்வதில்லை.
சித்தப்பாவிற்கு பிறந்தவனாக இருந்தால் மட்டுமே தாய் தந்தையை விட்டு விலகிச் செல்வான்.
நான் களனியை விட்டு போக மாட்டேன், பசில் ராஜபக்ச சொன்னால் மட்டும் போவேன் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq5.html
ஜே.வி.பி. மீது சேறு பூச வேண்டாம்!- ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:43.20 AM GMT ]
ஜே.வி.பி கட்சி மீது சேறு பூச வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஜே.வி.பி. மீத சேறு பூச வேண்டாம் என அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சியின் மீதும் சேறு பூசுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சில கட்சிகள் பதற்றமடைந்துள்ளன. எனவே அவ்வாறான கட்சிகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம்.
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் அமைச்சர்களை சந்தித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq6.html

மியன்மார் கடலில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 01:49.41 AM GMT ]
மியன்மார் கடலில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை மீனவர்கள் நிர்க்கதியான நிலையில் தத்தளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீனவர்கள் பயணித்த படகுகள் புயல் காற்றில் சிக்கி மியன்மார் கடற்பரப்பில் தத்தளித்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 35 மீன்பிடிப் படகுகள் புயலில் சிக்கியுள்ளன. இதில் 180க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயணித்துள்ளனர்.
மீனவர்களை மீட்பதற்கு மியன்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் நரேந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மியன்மார் அரசாங்கத்துடன் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.
அந்த வழியாக பயணித்த கப்பல்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்தப் படகுகளுடன் பயணித்த மேலும் 3 படகுகளில் பயணித்த 15 மீனவர்களை மியன்மார் அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டின் பரப்பிற்குள் பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmq7.html

Geen opmerkingen:

Een reactie posten