ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள, இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஜோட்ச் (39) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவர், பாகலூர் சாலையில் உள்ள, விஸ்வநாதபுரம் பகுதி விவசாய தோட்டத்தில், இயந்திரம் மூலம் புற்களை வெட்டி கொண்டிருந்தார்.
அப்போது, ஜோட்ச் மீது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜோட்சை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் ஜோட்ச் மரணமடைந்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet6.html
Geen opmerkingen:
Een reactie posten