தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

எல்லாளன் நடவடிக்கை! கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

மட்டு.நாவற்குடா பொறியியலாளர் வீட்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது! பொருட்களும் மீட்பு
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 08:35.05 AM GMT ]
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியில் கடந்த வாரம் வீட்டின் கூரை பிரித்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒருவரை தேடி வருவதாகவும் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் நாவற்குடா அம்பாள் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொலநறுவை மாவட்ட நிறைவேற்று பொறியியலாளரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி ரஹீமுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதன்போது 46 பவுண் தங்க நகைகள் மற்றும் லப்டோப், கைத்தொலைபேசி உட்பட சுமார் 39 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையின் போது குறித்த கொள்ளையர் கைதுசெய்யப்பட்டதுடன் பொருட்களும் மீட்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பெரியபோரதீவில் நகை வியாபாரியிடம் இருந்து மீட்கப்பட்டதுடன் பொருட்கள் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மீட்கப்பட்டதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவங்களில் தீவிர விசாரணையை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களான உபாலி தர்மசிறி, சியலகம, ஜயசிங்க, பத்மநாதன், ரொபீன், திசாநாயக்க ஆகியோர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet0.html

லண்டன் அறிவாகாரம் ஆதரவு இணையம் சாந்தபுரம் உயர்தர மாணவர்களுக்கு உதவி
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 11:53.13 AM GMT ]
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு அமைய கிளிநொச்சி சாந்தபுரத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் பதினைந்து மாணவர்களுக்கு லண்டன் அறிவாகாரம் ஆதரவு இணையம் அமைப்பு நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்றJ.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை இளைஞர் அணியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சர்வானந்தா ஆற்றினார்.
லண்டன் அறிவாகாரம் ஆதரவு அமைப்பின் குடும்பத்தவர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த இந்தநிகழ்வில், பா.உறுப்பினர் சி.சிறீதரன், வட மாகாண சபையின் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் மாணவர்களுக்கான கருத்துரைகளை வழங்கினர்.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில்,
சாந்தபுரத்தை சேர்ந்த உயர்தரம் கற்கின்ற உங்களுக்கு இந்த உதவிகளை லண்டன் அறிவாகாரம் ஆதரவு அமைப்பு வழங்குவதையிட்டு மிக்க மகிழ்ச்சி.
கடந்த காலங்களில் பல்வேறு பாதிப்புக்களை கண்டிருக்கின்ற சாந்தபுரம் கிராமத்தின் எதிர்கால விடிவெள்ளிகளாக உங்களை நான் பார்க்கின்றேன்.
உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். நீங்கள் இந்த மண்ணில் எப்படி உங்கள் வாழ்வை கட்டி அமைக்க வேண்டுமென்ற பாடங்கள் நிறையவே உங்கள் முன் இருக்கின்றது.
இதை மனதில் மிகவும் ஆணித்தரமாக பதித்து இந்த பருவத்திலேயே உங்களை எங்கள் மண்ணுக்கு ஏற்றவர்களாக எம்மண்ணை அறிவால் வழிநடத்துகின்றவர்களாக நீங்கள் மாறவேண்டும்.
நீங்கள் வல்லமை உள்ளவர்கள். நிச்சயம் உங்களால் சாதித்துக்காட்ட முடியும். அதை மனதில் கொள்ளுங்கள். அறிவாகாரம் ஆதரவு இணையம் உங்களிடம் எதிர்பார்ப்பது நீங்கள் கல்விமான்களாக தாய் மண்ணில் தாய் மொழியில் பற்றுள்ளவர்களாக உலக அறிவு பெற்றவர்களாக வாழவேண்டுமென்பதே என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet3.html

தெப்பக்குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 12:23.20 PM GMT ]
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா தோட்ட தெப்பக்குளத்திலிருந்து 41 வயதுடைய ஆணின் சடலம் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர், இன்று காலை வேளையில் வீட்டிலிருந்து குளிக்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் வீட்டுக்கு வராததை அறிந்த உறவினர்கள் தேடும் பணியில் ஈடுப்படும் போது குளத்தில் சடலமாக மிதப்பதை கண்டுள்ளனர்.
பின்னர் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராமசாமி ராமசந்திரன் என தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/show-RUmszARWKWet4.html

எல்லாளன் நடவடிக்கை! கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 12:36.43 PM GMT ]
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவரால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள் இன்றாகும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில் கெரில்லா போராட்டமாக காணப்பட்டது.
அதன் வளர்ச்சிப் படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சி கண்டது.
பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்தது.
இத்தாக்குதலில் ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரிய சேத்தை ஏற்படுத்தியதுடன், பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.
தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப் பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்து சென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக் கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது.
தமிழர் தேசம் தலை நிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWet5.html

Geen opmerkingen:

Een reactie posten