முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அமைதி, வளம், வளர்ச்சி” என்பதற்கேற்ப தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அன்பால், பாசத்தால், மாறாப் பற்றால் மக்களும், சில அமைப்புகளும் தாங்களாகவே உணர்ச்சிவயப்பட்டு நடத்தும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசை இணைத்துப் பேசுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, கடந்த 40 மாதங்களாக அதைச் செயல்படுத்தியும் காட்டினார்கள்.
வளர்ச்சித் திட்டங்கள் மக்களை சென்றடைந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார்கள்.
எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுவே நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?20SAlHdbdAY063402cMQ3222Ym72adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
| சிங்கத்த கர்நாடக கோர்ட்டுல பார்த்திருப்ப...ஓட்டு வேட்டையாடி பாத்திருக்கியா: ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே |
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 12:48.25 PM GMT +05:30 ] |
ஜெயலலிதாவே பெங்களூர் சிறையில் இருக்கிறார், ஆனால் தமிழகத்திலோ போராட்டங்களை விட அதிகளவு போஸ்டர்களே ஒட்டப்படுகின்றன. |
குழந்தைகள் அம்மாவை அழைப்பது முதற்கொண்டு சினிமாப்பட வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
http://www.newindianews.com/view.php?20SAlHdbdKY063402cMQ3222Ym72adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
| கருகிய பட்டாசு…கசந்த இனிப்பு: பற்றி எரியும் தமிழகம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 04:27.12 PM GMT +05:30 ] |
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். |
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதை பார்த்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அவர்களின் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அதிமுகவினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை வழியாக மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் கர்நாடக பதிவு எண் கொண்ட கே.பி.என் பேருந்துமீது இருசக்கர வாகனங்களில் வந்த இரண்டு மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பேருந்தின் முன்பக்க முற்றிலுமாக கண்ணாடி சிதறியது. மேலும், நாமக்கல், திருச்சங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் பகுதியில் உள்ள சொர்ணகாளிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக மராமத்து பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அதற்காக கோயிலை சுற்றி ஓலை தட்டியால் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து, அங்குள்ள அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த பட்டாசின் தீப்பொறிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஓலை தட்டிகளின் மீது விழுந்து திடீரென தீப்பிடித்தது. அப்போது திடீரென அப்பகுதியில் மழை பெய்ததால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிமுகவினர் கோயிலுக்கு தீ வைத்து விட்டதாகக் கூறி இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.newindianews.com/view.php?20SAlHdbdUY063402cMQ3222Ym72adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
| தமிழக சிறைக்கு ஜெயலலிதா: அதிகாரம் இல்லாத கர்நாடகம் |
| [ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 06:08.01 AM GMT +05:30 ] |
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். |
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் திகதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை அடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானதே எனக் கூறி, ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
இதற்கிடையே, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றலாம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட தலைவர்கள் யோசனை தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக நேற்று பெங்களூரில் அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. எனவே ஜெயலலிதாவை தமிழகத்திற்கு மாற்றும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
|
http://www.newindianews.com/view.php?20SAlRdbdoY063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
|
| மண்சோறு..மொட்டை…ரத்த கையெழுத்து எதுவும் பலிக்கவில்லையே! தொடரும் அதிமுக சோகம் |
| [ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 06:38.08 AM GMT +05:30 ] |
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் நடத்திய பிரார்த்தனைகள் எதுவும் பலிக்கவில்லை. |
கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது நேற்றைய தினம் (அக்டோபர் 7ம் திகதி) ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று நடைபெற்ற பிரார்த்தனைகள் எதுவும் பலிக்காததால் அதிமுகவினரோ தேம்பி தேம்பி அழுதுவருகின்றனர்.
இதோ, அதிமுகவினரின் பிரார்த்தனைகள்,
|
http://www.newindianews.com/view.php?20SAlRdbdIY063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
| ஜெயலலிதாவிற்கு "செக்" |
| [ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:49.35 AM GMT +05:30 ] |
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மேல்முறையீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா தள்ளுடி செய்து ஜாமீன் வழங்கிட மறுத்தார்.
இந்நிலையில் தீர்ப்பில் நகல் இன்று வரை கிடைக்காததால், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பீல் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
http://www.newindianews.com/view.php?20SAlRdbdeY063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
| கன்னடர்களை சிறைபிடிக்கும் தமிழகம்: எச்சரிக்கும் போஸ்டரால் பரபரப்பு |
| [ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:28.01 AM GMT +05:30 ] |
கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் வகையில் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சை சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. |
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு பிணை மறுக்கப்பட்டால் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என சிலர் சென்னையின் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.
இதனால், அங்கு கன்னட மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில் கர்நாடக காவல்துறை உயர் அதிகாரி எம்.என். ரெட்டி, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார்.
விஷமிகள் சிலர் ஒட்டிய சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வதந்திதகள் மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தப் போஸ்டரில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, திருச்சி மக்களவை எம்.பி.பி.குமார், எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், ஆயிரம் விளக்கு கே.சி.விஜய் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
சர்ச்சை சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அவற்றை உடனடியாக அகற்ற வலியுறுத்தியதாக வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார்.
|
http://www.newindianews.com/view.php?20SAlRdbd4Y063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23 |
|
Geen opmerkingen:
Een reactie posten