தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

யாழ். கொக்குவில் இளைஞன் நுவரெலியாவில் மரணம்!

யாழ். கோக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நுவரெலியா இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்துள்ளார்.


கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24 வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞனே  இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11.10க்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள சிலருடன் இறம்பொடைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவருடைய சடலம், கொத்மலை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten