தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

கையை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி: 100 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு



இடது கையை இழந்த கொழும்பு சட்டபீட மாணவி அரசாங்கத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது இடது கை துண்டிக்கப்பட இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள் செயற்பட்டனர்.
எனவே அரசாங்கம் தனக்கு 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக்கோரி சட்டத்தரணி ஊடாக மாணவி அச்சலா பிரியதர்சினி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மாத்தறை மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளின் அலட்சியம் காரணமாகவே தனது கை துண்டிக்கப்பட்டது என்று அவர் தனது முறைப்பட்டில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி அருட்பிரகாசம் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் எதிரிகளாக, மாத்தறை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை இயக்குநர்கள், சுகாதார சேவையின் செயலாளர் நாயகம், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தவறி விழுந்ததினால் கை முறிவு ஏற்பட்டு தான் மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே தான் வெளியேறியதாக அச்சலா தெரிவித்துள்ளார்.
மாத்தறை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஊழியர்கள், தான் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை உரிய முறையில் மருத்துவ சேவையாற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
மாத்தறை கீகொடவை சேர்ந்த அச்சலா பிரியதர்சினி, கடந்த வருடம் ஜனவரி மாதம் மாடியிலிருந்து தவறி விழுந்தார்.
இடதுகையில் முறிவு ஏற்பட்டு குறித்த மாணவி மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 22ஆம் திகதி கை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்பேரில் அமைச்சின் செயலாளர் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
http://www.tamilwin.com/show-RUmszATaKWnx4.html

Geen opmerkingen:

Een reactie posten