தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

பகையை வளர்ப்பதற்காக எதிர்ப்பைக் காட்டக் கூடாது!



ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும்: இலங்கை அகதி முகாமில் உண்ணாவிரதப் போராட்டம்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 10:13.59 AM GMT ]
தமிழகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி இன்று சுமார் 2ஆயிரம் பேர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
ஜெயலலிதாவை விடுதலைச் செய்யக் கோரியும், அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும் தமிழகமெங்கும் அ.தி.மு.க வினர் உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் முகாம் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்த உண்ணாவிரதத்தில் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 948 குடும்பங்களை சேர்ந்த சுமார் 200பேர் கலந்துக் கொண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட இலங்கை தமிழரான கண்ணன் பேசுகையில்,
தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் அவல நிலையை கண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்.
அகதிகள் முகாமில் சிமெண்ட் சாலை, இலவச மின்சாரம், குடியிருக்க வீடுகள், மகளிர்களுக்கு தையல் இயந்திரம், முதியோருக்கு உதவித் தொகை, மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, இலவச பள்ளிச்சீருடை, நோட்டுப் புத்தகம், விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு திருமண உதவித் தொகை என தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இணையாக அகதிகளுக்கு ஜெயலலிதா அம்மையார் அவரது கடந்த 3 ஆண்டு ஆட்சியில் வழங்கியுள்ளார்.
அவருக்கு சிறை தண்டனை அளித்துள்ளது முகாமில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களையும் பெரும் வேதனைப்படுத்தியது என தெரிவித்த அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை பெற முகாமில் உள்ள அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex3.html

நீர்கொழும்பு நகைக்கடையில் திருட்டு! நள்ளிரவில் திருடர்கள் கைவரிசை
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 10:03.02 AM GMT ]
நீர்கொழும்பு நகரில் வர்த்தகப் பிரதேசத்தில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மடிக் கணனி என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் , இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிய வருகிறது.
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்டார் கோல்ட் ஹவுஸ் என்ற நகைக்கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கடையில் நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் என்பன விற்பனை செய்யப்படுகின்றன. கடையின் உரிமையாளர் நீர்கொழும்பைச் சேர்ந்த எஸ்எச்.எம். நசூர்தீன் என்பவராவார்.
சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரின் மைத்துனர் தெரிவித்ததாவது,
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் கடை மூடப்பட்டது. அதன் பின்னரே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு வேளையில் திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என நினைக்கிறோம்.
கடையின் மேல் மாடி வழியாக நுழைந்து, அல்லது மேல் மாடியில் உள்ள யன்னலை திறந்து உள்ளே நுழைந்து திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என கருதுகிறோம்.
தங்கம் மூன்று அல்லது நான்கு பவுண், வெள்ளி 500 கிராம், இரண்டு மடிக் கணனிகள் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவு போயுள்ளன.
கடையில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை திருடர்களால் திறக்க முடியாமல் போனதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான நகைகள் களவு போனது தவிர்க்கப்பட்டுள்ளது.
கடையில் இருந்த நான்கு இலாச்சிகள் உடைக்கப்பட்டே திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex1.html
ஆளும் கட்சியின் எதிர்பார்ப்புகள் சிதறி விட்டன: சுனில் அந்துன்நெத்தி
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 10:04.54 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்பார்ப்புகள் சிதறி விட்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊவா தேர்தல் வெற்றியுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நம்பிக்கையுடன் இருந்த அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊவா தேர்தலில் அரசாங்கம் விளிம்பில் வெற்றி பெற்றாலும் தேர்தலின் ஒட்டுமொத்த விளைவுகள் குறித்து ஆளும் கட்சிக்கு கவலைகள் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சட்ட சிக்கல் உள்ளது. அவர் மூன்றாவது முறையாக போட்டியிடுவது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் செயல்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்துறை அமைப்புகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது எனவும் சுனில் அந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்க முகாமுக்குள் இரகசியமான அமைப்புகள் உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக திறப்பு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பல அரசியல்வாதிகள் வேண்டுமென்றே விலகியிருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் ஏராளமான உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைமை மற்றும் நாட்டின் விவகாரங்கள் தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளனர் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex2.html
பகையை வளர்ப்பதற்காக எதிர்ப்பைக் காட்டக் கூடாது
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 10:14.36 AM GMT ] [ valampurii.com ]
குருசேத்திரப் போர் ஆயத்தமாக இருக்கும் நேரம். கெளரவர் சேனையை அருச்சுனன் பார்க்கிறான். பிதாமகர் எனப்படும் வீஷ்மர் போர்க்களத்தில் தளபதியாக நிற்கின்றார்.
அடுத்து தமது குரு துரோணாச்சாரியார்- இப்படியே போர்க்களம் முழுவதும் உறவுகளும் உற்றவர்களுமாகக் காணப்பட, தேரில் இருந்து இறங்கிய அருச்சுனன் வீஷ்மரை நோக்கிச் செல்கின்றான்.
போர்க்களத்தின் இரு தரப்பிலும் பேரதிர்ச்சி ஏற்படுகிறது. அருச்சுனன் பயந்து விட்டான் என்று வீஷ்மர், துரோணர் தவிர்ந்த கெளரவர் சேனை நினைக்கிறது.
ஆனால் வீஷ்மரிடம் சென்ற அருச்சுனன், போரிடுவதற்கு அனுமதி தந்தருள்க! என்று கேட்கின்றான்.
அதற்கு மகனே! அருச்சுனா வெற்றி உனதாகுக! என்று ஆசி கூறுகின்றார் வீஷ்மர்.
குருசேத்திரத்திரப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்கான முதல் இராஜதந்திரம் இதுதான்.
பாண்டவர்கள் வெற்றி பெறவேண்டுமென கெளரவர் சேனைத்தளபதி ஆசி வழங்கினால், துரியோதனன் எங்ஙனம் வெல்ல முடியும்?
மாறாக போர்க்களத்தில் நின்று கொண்டு; தேரால் இறங்கி வீஷ்மரிடம் சென்றால், என்னை பலவீனனாக நினைப்பார்களே என்று அருச்சுனன் நினைத்திருந்தால் வெற்றிக் கனியை அவர்கள் பெற்றிருக்க முடியாது.
ஆக, இராஜதந்திரம் என்பதும் பகைமை என்பதும் வேறுபட்டவை. இராஜதந்திரம் நமது இலக்கை அடைவதற்கானது. பகைமை எக்காலத்திலும் மன உளைச்சல் படுவதற்கானது.
இங்கு கெளரவர்களிடம் பகைமை இருந்தது. பாண்டவர்களிடம் தர்மத்தோடு கூடிய இராஜதந்திரம் இருந்தது. பகைமை வேரோடு அழித்தது. தர்மம் சேர்ந்த இராஜதந்திரம் வெற்றியைக் கொடுத்தது என்பதை குருசேத்திரப் போர் நமக்குக் கற்றுத் தருகிறது.
இரண்டாம் உலகப் போரில் நிர்மூலமாகிப் போன ஜப்பானிடம் பகைமை இருந்திருந்தால் அந்த நாடு இத்துணை அபிவிருத்தியை அடைந்திருக்க முடியாது.
எனவே நிலைமைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுப்பது மிக மிக அவசியம்.
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தனது பதவியேற்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவிற்கு முன்பாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இது விக்னேஸ்வரனின் இராஜதந்திரம் மட்டுமன்றி சமாதான சூழலுக்கான நேசக் கரம் நீட்டும் செயலாகவும் கருதக் கூடியது.
எனினும் இலங்கை அரசு அவ்வாறு கருதியதாகத் தெரியவில்லை. அவ்வாறு கருதியிருந்தால், வடக்கின் முதல்வர் விடுத்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
இருந்தும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் தூய்மையான எண்ணத்தோடு செயற்பட்டதை நீதி உணர்ந்த தென்பகுதி மக்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வர். இது நிச்சயம் தமிழ் மக்களுக்குச் சாதகமானதாகும்.
எனவே எதிர்வரும் 13 ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­யாழ்ப்பாணத்திற்கு வரும் போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் கலந்து கொண்டால் இன்னும் நல்லது.
வடபகுதி தமிழர்களின் தாயகம் என்பதை உணர்த்துவதற்கும் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்கும் நாம் ஒரு போதும் பின்னடிக்கக் கூடாது.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தில் வடக்கின் முதல்வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்வது நமக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் ஒருபோதும் பாதகமாகாது.
ஆகையால் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் வட மாகாண அரசின் பிரசன்னம் அவசியம்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex4.html

Geen opmerkingen:

Een reactie posten