தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

பயங்கரவாத தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட மாட்டாது: அரசாங்கம்



வியட்நாம் மற்றும் இலங்கை இடையில் வர்த்தக தொடர்புகள்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 10:48.07 AM GMT ]
இலங்கையுடன் சமய, சமூக மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்தும் நீண்டகால வேலைத்திட்டத்துடன் புதிய வர்த்தக தொடர்புகளையும் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக இலங்கைக்கான புதிய வியட்நாம் தூதுவர் ஃபாஹன் கியூத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டி.எம். ஜயரத்னவை நேற்று பிரதமரின் அலுவலகத்தில் சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 40 வருட இராஜதந்திர தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் எதிர்பார்ப்புடன் புதிய யோசனைகளை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் அரிசி மற்றும் ஏனைய முடிவு பொருட்களை இலங்கைக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்ய எண்ணியுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
1970ம் ஆண்டு தொடங்கிய இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகள் தற்போது வலுவடைந்துள்ளது என்றும் வியட்நாம் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex5.html
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஊடகங்களை முடக்கும் அரசு: கபே- கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்த மகிந்த
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 10:50.48 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே விசனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இணைய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு தடுத்து நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த கருத்தை வெளியிட்டுள்ளது கபே அமைப்பு.
இது கருத்துவெளிப்பாட்டின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சகல முக்கிய இணையத் தளங்களையும் சோந்த 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவிருந்த இந்த செயலமர்வு நீர்கொழும்பு பொலிஸாரும், பொலிஸ் தலைமையகமும் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகத்துக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டது.
கடந்த காலங்களிலும் இதே தந்திரோபாயம் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நாங்கள் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் பெரும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக கருதுகிறோம்.
இவ்வாறு இணையத்தளச் செய்தியாளர்களை ஒடுக்கினால், பெருமளவு மக்களுக்கு முக்கியமான தகவல்கள் சென்றடைவதை தடுக்கலாம் என அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு தகவல்கள் சென்றடைவதை தடுக்கலாம் என அது எதிர்பார்க்கிறது. இதன் மூலமாக தகவல்கள் பரவுவதை தனது ஆதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருக்க அது விரும்புகிறது.
கடந்த காலங்களில் சமூக ஊடகங்களே முக்கியமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. மக்கள் மத்தியில் அவை குறித்த கருத்தை உருவாக்கியுள்ளன என தேர்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பற்றி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்த மகிந்த
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியற்றுடன் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இந்த கட்சிகளின் தலைவர்களான திஸ்ஸ வித்தாரண, டியூ. குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தற்போது இத்தாலி மற்றும் வத்திகான் நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில், நாடு திரும்பியதும் ஏனைய கட்சிகளுடன் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex6.html
பயங்கரவாத தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட மாட்டாது: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:09.29 AM GMT ]
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தியாகி திலிபன் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை மற்றும் இரகசியமான முறையில் பிரிவினைவாத எண்ணங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் பரப்பி வருவது என்பன அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு காரணம் என திவயின தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்தால், கடுமையான குற்றங்களை இழைத்த 88 புலி உறுப்பினர்களுக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுப்பது சிரமம் என பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் திவயின கூறியுள்ளது.
இந்த சட்டத்தை இரத்துச் செய்யுமாறு பிரித்தானியாவும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVex7.html

Geen opmerkingen:

Een reactie posten