தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

நோனிஸ் மீதான தாக்குதல்! விசாரணை செய்யுமாறு சம்பிக்க வலியுறுத்து!

கொழும்பில் ஊடக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் - யுவதியை கடத்த முயற்சித்த இருவர் கைது
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:19.26 PM GMT ]
பதுளை எடம்பிட்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்தன குருப்பு ஆராச்சி மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலை கண்டித்து ஊடக அமைப்புகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, இரான் விக்ரமரத்ன, ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய மாற்று கொள்கைக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊடகங்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தாம் மக்களுடன் இணைந்து எப்போதும் குரல் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹிட்லர், முசோலினி காலத்தில் போன்ற ஊடக அடக்குமுறை இலங்கையில் இருப்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
யுவதியை பலவந்தமாக கடத்த முயற்சித்த இரு இளைஞர்கள் கைது
அனுராதபுரம் பஸ் நிலையத்தில் யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் சென்ற கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயதான யுவதி பஸ் நிலையத்தில் பஸ்ஸூக்காக காத்திருந்த போது, கெப் வண்டியில் சென்ற சந்தேக நபர்களை யுவதியை தாக்கி கெப் வண்டியில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக இது குறித்து வடத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் யுவதியை மீட்டத்துடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv0.html
எப்படி முயற்சித்தாலும் மகிந்தவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது: பாலித ரங்கே பண்டார
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:24.36 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளினால் வெற்றி பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தமக்கு சார்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை கொடுத்து வெற்றி பெற முயற்சித்தாலும், அவர்களால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பொலிஸாரை எடுப்பிடி சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து, அரசாங்கத்திற்கு எடுப்பிடி வேலைகளை செய்து வரும் பொலிஸ் 5 அதிகாரிகளுக்கு, சில மாகாணங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல, களனி பிரதேசத்திற்கு பொறுப்பான வெதிசிங்க, மாத்தறைக்கு பொறுப்பான தேசபந்து தென்னகோன், மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிறிவர்தன மற்றும் எப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோருக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இப்படியான எந்த நடவடிக்கைகளினாலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவினால் வெற்றி பெற முடியாது. அது சம்பந்தமான தீர்மானத்தை மக்கள் எடுத்து விட்டனர் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv1.html

மீனவரின் தாடியை வெட்டிய அமைச்சர்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:34.09 PM GMT ]
மீனவர் ஒருவரின் தாடியை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெட்டிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவ, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 2005ம் ஆண்டு முதல் மீனவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் இறங்குதுறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, குறித்த மீனவரை சந்தித்த அமைச்சர், இறங்குதுறை அமைப்பதான தனது உறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்ததுடன், தாடியை வெட்டுமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மீனவரின் தாடியை அமைச்சரே வெட்டி விட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv2.html
நோனிஸ் மீதான தாக்குதல்! விசாரணை செய்யுமாறு சம்பிக்க வலியுறுத்து
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 12:48.32 PM GMT ]
நியூயோர்க்கில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உண்மையெனின், அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸை பலர் முன்னிலையில் ஓங்கி அறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் கசிந்து அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின்போது கிறிஸ் நோனிஸ் வெகு சிரத்தையுடன் உழைத்ததாகவும் அமைச்சர் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தால் கட்டாயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmszATWKVfv3.html

Geen opmerkingen:

Een reactie posten