தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரினால் தொலைக்காட்சி நடிகைக்கு கொலை அச்சுறுத்தல்?

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு திட்டம்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 05:59.06 AM GMT ]
சிறைச்சாலை வசதிகளை பார்வையிடும் நோக்கில் மஹர சிறைக்குச் செல்லும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட பணிப்புரையின் பேரில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரச நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் நோக்கில் திடீர் பாய்ச்சல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல இடங்களில் இந்தக்குழுவினர் இதற்கு முன் தங்கள் ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
இதன் ஒரு கட்டமாக இன்று மஹர சிறைச்சாலைத் தொகுதியில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்போது அவர்களின் பாதுகாவலர்களை சிறைச்சாலை வளாகத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் சிறைக்கைதிகளைக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfoz.html
ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரினால் தொலைக்காட்சி நடிகைக்கு கொலை அச்சுறுத்தல்?
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 06:00.56 AM GMT ]
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவரினால் சிங்கள தொலைக்காட்சி நடிகையொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சி தொடர் இயக்குனர் நாலக வெதமுல்லை. இவரது மனைவி நடிகை சந்தி ரணதுங்க. சிங்கள நடிகைகளில் பேரழகி என்று வர்ணிக்கப்படுபவர்.
இந்நிலையில் இவரது அழகில் மயங்கிய ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமன் திசாநாயக்க என்பவர், அடிக்கடி இவருக்குத் தொல்லை கொடுத்து வந்தார். அதனைத் தட்டிக் கேட்ட சந்தியின் கணவர் நாலக வெதமுல்லை திடீரென்று மர்மமான முறையில் இறந்து போனார்.
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமன் திசாநாயக்கவே சூட்சுமமான முறையில் அவரைக் கொலை செய்துவிட்டதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் சந்தி ரணதுங்கவை தனது வாகனத்தில் கடத்திச் சென்ற சமன் திசாநாயக்க, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றிருந்தார். அதற்கு மறுத்த சந்தியை அடித்து உதைத்திருந்தார். பின்னர் அடி உதை தாங்காமல் மயங்கி விழுந்த சந்தி ரணதுங்க இறந்து விட்டதாக நினைத்து நட்டநடுவீதியில் அவரை கைவிட்டு சமன் திசாநாயக்க தப்பியோடியிருந்தார்.
பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்ட சந்தி ரணதுங்க மீது சமன் திசாநாயக்கவை தாக்கியதாக பொலிசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் சமன் திசாநாயக்க தன்னுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதை சந்தி ரணதுங்க பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் நாலக வெதமுல்லை இறப்பதற்கு முன் அவரைக் கொலை செய்யப் போவதாக சமன் திசாநாயக்க அச்சுறுத்தியதும் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் குறித்து கேள்விப்பட்டுள்ள சமன் திசாநாயக்க தற்போது கூலிப்படையினரை ஏவி சந்தி ரணதுங்கவை தீர்த்துக்கட்ட முயற்சி மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் விஜயானந்த ஹேரத் தனது கள்ளக் காதலியுடன் பயணம் செய்த கார் பாதையில் சென்ற ஒருவரை மோதி கொலை செய்த சம்பவம் நடந்திருந்தது.
இவ்வாறான முறைகேடான சம்பவங்களில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் ஈடுபட்ட போதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவற்றைக் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfo0.html

Geen opmerkingen:

Een reactie posten