[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 04:52.20 AM GMT ]
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து விளையாட்டு வீரர்கள் குழுவொன்று சென்றிருந்தது. எனினும் அங்கிருந்து இலங்கை திரும்பும் போது மிகவும் சொற்பமானவர்களே திரும்பி வந்திருந்தனர்.
சுமார் 20 பேருக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு நாடு திரும்பாத நிலையில், அவர்கள் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
ஜப்பானில் நிலவும் அதிகூடிய சம்பளத்துடனான வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவர்கள் தப்பியோடியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx6.html
ரயிலில் யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 05:07.04 AM GMT ]
எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் யாழ். தேவி உள்ளிட்ட நான்கு ரயில் வண்டிகள் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதன்போது காங்கேசன்துறை வரையிலான யாழ்.தேவியின் முதல் பயணத்தில் இணைந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரை அவர் ரயிலில் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் நிலவிய யுத்த சூழல் காரணமாக சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்துக்கு ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பளை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் யாழ். தேவி ரயில் வண்டி, 14ம் திகதி தொடக்கம் காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
வடக்கிற்கான ரயில் பாதை மீளமைப்புக்கு இந்திய அரசாங்கம் கடனுதவிகளை வழங்கியிருந்தது.
மேலும் ரயில் தண்டவாள நிர்மாணிப்பு பணிகளையும் இந்தியாவின் இர்கான் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx7.html
சர்வதேச சிறுவர், முதியோர் தினம் இன்று- கொண்டாடுவதற்கு அரசாங்கத்திற்கு தகுதி கிடையாது: ஐ.தே.க
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 05:55.40 AM GMT ]
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத் தவிர வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்களும் இன்று நடைபெறவுள்ளன.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்கபட வேண்டியது அவசியமானதொன்றாகும்.
சிறுவர்கள் துன்புறுத்தல்கள் இன்று பொதுவாக நடக்கும் விடயமாகிவிட்டது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும்.
சிறுவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உண்டு. அதே போல் பெற்றோர், இருக்கும் சூழல், குடும்ப நிலைமை, நண்பர்கள் போன்ற இதர காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.
சர்வதேச ரீதியாக பல்வேறு வகைகளில் சிறுவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். பாடசாலை இடைவிலகல், வறுமை, போஷாக்கின்மை, பாலியல் வன்முறைகள் என அவர்களுக்கு எதிரான வன்முறைகளின் பட்டியல் நீள்கிறது.
இன்று வறுமையின் காரணமாக தாய்மார்கள் வெளியூர் வேலைக்குச் செல்வதால் சிறுவர்கள் அந்நியரால் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கின்றனர். போதைபொருள் பாவனை, விற்பனை அல்லது அந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கான உரிமை சிறுவர்களுக்கு உண்டு. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல், அல்லது பாலியல் ரீதியாகத் தவறான பயன்களைப் பெறுதல், மற்றும் சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளுக்காக தூண்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு.
சிறுவர்களுக்கான பல தொண்டு நிறுவனங்கள் பல உதவிகள் செய்தாலும் அவை எல்லோரையும் சென்றடைவதில்லை என்பதே இன்றைய தினத்தில் சிந்திக்க வேண்டும்.
சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட அரசாங்கத்திற்கு தகுதி கிடையாது:ஐ.தே.க
சர்வதேச சிறுவர் தினக்கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்திற்கு தகுதி கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டங்களை கோலாகலமாக முன்னெடுக்கின்றது.
நாட்டின் சிறுவர் சமூகத்திற்கு என்ன சேவை செய்தமைக்காக இவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றது.
இலவசக் கல்வி,பகல் உணவு, இலவச புத்தகம், இலவச பால் போன்ற அனைத்து வசதிகளையும் இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
சிறுவர்களினால் வாழ முடியாத ஓர் சமூகப் பின்னணியை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
சுமார் இரண்டு கோடியான நாட்டின் மொத்த சனத்தொகையில் 26 வீதமானவர்கள் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியராகும்.
இந் நாட்டில் சிறுவர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய ஏதேனும் திட்டங்கள் காணப்படுகின்றனவா? நாட்டில் பாடசாலை செல்லக்கூடிய 50000 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை.
ஆரம்ப கல்வியைத் தொடராத சிறுவர் சிறுமியரின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் இலகுவில் பிழையான வழிகளில் செல்லக்கூடும்.
செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் உரிமையாகியிருந்த கல்வி வசதியை சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கர அனைத்து சிறுவர் சிறுமியருக்கும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இலவசக் கல்வியை அறிமுகம்செய்தார்.
அதன் பின்னர் 1977ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கல்வியை மேம்படுத்தவும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட 200 மாணவ மாணவியருக்கு பாடசாலை உபகரணங்கள் புலமைப் பரிசில்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து கொடுக்கும் நிகழ்வில் அண்மையில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfoy.html
Geen opmerkingen:
Een reactie posten