தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

ஜெயாவை மடக்கினார் சோனியா! அடுத்து என்ன...??


நடந்து முடிந்த தேர்தலில், சோனியாவின் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து இந்திய எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்தது யாவரும் அறிந்ததே. தற்போது அ.தி.முக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கைதாகி பெங்களூர் சிறையில் இருக்கிறார். அம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருக்கிறது. இதேவேளை கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரத்தியேகமாக தொலைபேசி அழைப்பை விடுத்துள்ளார். செல்வி ஜெயலலிதாவுக்கு எந்த விதமான குறையும் இல்லாமல் அவரை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து கர்நாடக முதல்வர், சீதாராமையா பல வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பேசியுள்ளனர். அதே போன்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக எம்.பி. ஒருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசியுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களாக எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகள் தற்போது நட்பு வட்டாரத்தில் இறங்கியுள்ளது. இது பிற்காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை கொண்டுவர வல்லது என்று அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது தமிழகத்தில் உள்ள 40 எம்.பி சீட்டுகளையும் கைப்பற்றும் பலத்தில் ஜெயல்லிதா உள்ளார்.

இவை அனைத்தும் காங்கிரசை சப்போட் செய்தால், சோனியாவுக்கு அதுவே பெரும் பலமாக மாறும் நிலை தோன்றும். இது இவ்வாறு இருக்க, 27ம் திகதி அன்று நீதிமன்றில் பிழையான தீர்ப்பு கிடைத்தால் அவரை சிறைக்கு அனுப்பாமல் அப்படியே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது குறித்து அம்மாநில முதல்வரோடு ஏற்கனவே அதிமுகவினர் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் சீதாராமையாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதிமுகவின நினைத்தது போலவே தீர்ப்பும் வந்துவிட்டது. உடனே மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கூட்டிச் செல்ல திட்டம்மிட்டார்களா. ஆனால் செல்வி ஜெயலலிதா தான் அதனை மறுத்துவிட்டார். அவரது உற்ற நண்பி சசிகலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்க்கவில்லையாம்.

கைது என்றவுடன் நெஞ்சுவலி வந்ததுபோல மருத்துவமையில் சென்று நடிக்க நான் விருப்பவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை சட்டத்தை எதிர்கொண்டு தீர்ப்பை மாற்றுவேன். இல்லையென்றால் சிறையில் இருக்கிறேன் என்று அவர் பிடிவாதமாக கூறிவிட்டார். இதனால் அவர் சிறை சென்றதும், அவருக்கு சிறையில் வேண்டிய வசதிகளை சீதாராமையா ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கும் அவர் பட்டத்து இளவரசி போலவே வாழ்க்கை நடத்துகிறார். கர்நாடகாவில் பாதுகாப்பு இல்லை, எனவே செல்வி ஜெயலலிதாவை தமிழ் நாட்டு சிறைக்கு மாற்றவேண்டும் என்று கதைகளை கிளப்பி விடுதவே கர்நாடக அரசு தான் என்பது பலருக்கு புரியாத விடையமாக உள்ளது.
07 Oct 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412684853&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten