தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

தீவிரவாதிகளின் ஆசைக்கு இரையாகும் சிறுமிகள்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் அட்டூழியம் (வீடியோ இணைப்பு) !

ஈராக்-சிரியாவில் கடத்தப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதாக ஐ.நா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் பலரை கொன்று குவித்து வருவதுடன், இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறியதாவது, கடத்தப்பட்ட யாஸிதி, கிறிஸ்துவ சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் பலர் கள்ளசந்தையில் விற்கப்பட்டு உள்ளூர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாமிய அரசு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட பல குற்றங்களை புரிவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷியத் ரா அல் ஹூசைன் (Zeid Ra'ad al Hussein) குறிப்பிட்டுள்ளார்.
http://newsonews.com/view.php?20260222222PPBdcceaomOJJ4ceeM6AAbbdcccMQWdbdddlAA004355nZ3e044E8oo23

Geen opmerkingen:

Een reactie posten