தேர்தல் அறிவிக்கப்பட்டால் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்: அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:25.01 AM GMT ]
இந்த தகவலை பாப்பரசரின் இலங்கை விஜயம் சம்பந்தமான ஊடக பணிப்பாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்று பற்றி பேசப்படுவதற்கு முன்னரே பாப்பரசர் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு தினங்கள் தொடர்பாக எந்த சந்தேகமும் இல்லை.
அரசாங்கம், இதுவரை ஜனாதிபதித் தேர்தலையோ, வேறு தேர்தலையோ அறிவித்து தேர்தல் நடக்கும் திகதிகளை அறிவிக்கவில்லை.
தேர்தல் ஒன்றுக்கான திகதி அறிவிக்கப்படாத நிலையில், பாப்பரசரின் விஜயத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது பற்றி எதனையும் கூறமுடியாது.
தேர்தல் பிரசாரங்கள் நடக்கும் நேரத்தில் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாது என்று தான் எண்ணுவதாகவும் சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
ரணில் தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் கொழும்பில் கூடுகின்றனர்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:45.07 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பொது இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான தீர்மானம் இதன் போது எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, ருகுணு மக்கள் கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி, மௌபிம மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATYKWnoz.html
மத்திய மாகாண சபை உறுப்பினா் கணபதி கனகராஜின் வாகனம் விபத்து- மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:45.25 AM GMT ]
இவ்விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதி வழுக்கியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரும்பு பெறுக்கியவர் மிதிவெடியில் சிக்கி காயம்
பளை, வேம்பொடுகேணிப் பகுதியில் இன்று மாலை 4.45 மணியளவில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொடிகாமத்தைச் சேர்ந்த மிதிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளரான டி.நாதன் (வயது 33) என்பவரே இவ்வாறு காயமடைந்தார்.
குறித்த நபர் இரும்புகள் பொறுக்குவதற்காக சென்றபோதே மிதிவெடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKWno0.html
சஜின் வாஸ் குணவர்தனவை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:59.21 AM GMT ]
நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் அளப்பரிய ராஜதந்திர சேவையில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ் நோனிஸ் பதவி விலகுவதை விட வெளிவிவகார அமைச்சில் இருந்து கொண்டு தூரநோக்கமின்றி செயற்படும் சஜின் வாஸ் குணவர்தனவே பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஓமல்பே சோபித தேரர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க உட்பட ஆளும் கட்சியின் பலர் சஜின்வாஸ் குணவர்தனவை அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதியாவார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKWno1.html
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?- ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 11:59.45 AM GMT ]
புனித பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி மாதம் விஜயம் செய்ய உள்ளதால், அந்த மாதத்தில் தேர்தல் நடத்துவது நல்லதல்ல என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத் தவிர ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரசாரத்திற்கு போதிய காலம் வழங்கப்பட வேண்டும்.
நவம்பர் மாதம் 19ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஜனவரி 10ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டால், வேட்புமனுக்கள் தாக்கல் செய்த செய்த பின்னர், பிரசாரங்களுக்காக 38 நாட்களே கிடைக்கும்.
தேர்தல் பிரசாரங்களுக்காக குறைந்தது 45 நாட்களாவது தேவை என ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் எச்சரிக்கை
அரச ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்த போவதாக அரச ஓய்வூதியம் பெறுவோரின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
அரசாங்கம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணாது போனால், வேட்பாளரை நிறுத்துவது குறித்து அந்த கூட்டமைப்பினர் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை விட 2006 ஆம் ஆண்டுக்கு பின் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு ஓய்வூதியம் பெறுவோரின் சங்கம் 2007 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை அதற்கு தீர்வுகாணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKWno2.html
சர்வதேச மன்னிப்புச் சபை பொய் அறிக்கை சமர்ப்பித்தது!- சிங்கள வார இதழ்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 12:03.36 PM GMT ]
மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாரதூரமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி கிடைக்காமல் நாடு திரும்பியவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவயின பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்காக செயற்படும் அமைப்புகள் இலங்கை தொடர்பாக வெளியிடும் அறிக்கைகளையும் அதில் உள்ளடக்கப்படும் விடயங்களையும் திவயின பத்திரிகை பொய்யானது என்று தெரிவித்தே தனது செய்திகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாக அந்த சிங்கள வார இதழ் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATYKWno3.html
Geen opmerkingen:
Een reactie posten