தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் இரத்தக்களரி ஏற்படும்: தா பாண்டியன்

அரசாங்கத்திற்கு ஐ.தே.கட்சி எச்சரிக்கை விளக்கை ஏற்றியுள்ளது: தயா கமகே
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 01:10.31 PM GMT ]
ஐக்கியம் மற்றும் வெற்றியின் பச்சை விளக்கை எரிய செய்து ஐக்கிய தேசியக் கட்சி அராங்கத்திற்கு எச்சரிக்கை விளக்கை ஏற்றியிருப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பது போல் பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடும் நபர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இடமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பச்சை விளக்கை ஏற்றி விட்டு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விளக்கை ஏற்றியுள்ளோம். இதனடிப்படையில் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கட்டாயம் வெற்றிபெறும்.
அரச பலத்தை பயன்படுத்தியே அரசாங்கம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தான கட்சியல்ல. சகல மதங்கள் மற்றும் இனங்களுக்கு உரிய கட்சி.
இதனால், எதிர்காலத்தில் நடக்கும் தேர்தலில் கிழக்கில் இரண்டு லட்சம் முஸ்லிம்களின் வாக்குகளையும் வடக்கில் 4 லட்சம் தமிழர்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெறும் எனவும் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt4.html
சுயலாபத்திற்காக கடல்வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது: பா.டெனீஷ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 02:33.49 PM GMT ]
யாழ்.மாவட்டத்தில் இழுவைப்படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி வடமராட்சிப் பகுதி இழுவைப் படகு தொழிலாளர்கள் நாளைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிலுக்கும் இடமளிக்கப் போவதில்லை என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இழுவைப் படகு மூலமான தொழில் மாவட்டத்திலுள்ள 15 ஆயிரம் கடற்றொழிலாளர்களை பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.குருநகர் பகுதியில் சுமார் 75 வரையிலான இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் உள்ளுரில் உள்ள இழுவைப் படகுகள் மற்றும் இடைமடி போட்டி மீன் பிடித்தல் போன்ற முறைகள் சட்ட ரீதியாக தடுக்கப்பட்டுள்ளன.
குருநகர் மீனவர்கள் மாற்று திட்டங்களை முன்மொழிந்து அவற்றை பெற்று இழுவைப் படகுகள் மூலமான கடற்றொழிலை கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில் வடமராட்சிப் பகுதியில் மட்டும் சுமார் 23 வரையான இழுவைப் படகுகள் தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவையும் தடுக்கப்பட்டது.
தடுக்கப்பட்ட தமது தொழிலை மீள செய்வதற்கு அனுமதிக்குமாறும், தொழில் தடைப்பட்டுள்ளமையினால் தாம் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் தமது கோரிக்கையினை வலியுறுத்தி நாளைய தினம் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும், மீனவர்கள் கூறியிருக்கின்றனர்.
சட்டத்திற்கு மாறான எந்தவொரு தொழிலுக்கும் வடமாகாண கடலில் இடம் கிடையாது.  இந்திய இழுவைப் படகுகளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், உள்ளூரில் செய்வது முறையில்லை.
மேலும் இது எங்கள் கடல்வளத்தை ஒரு சிலர் தங்கள் சுயலாபத்திற்காக அழிக்கும் செயற்பாடாகும். அதனை ஒருபோதும் நாம் ஒத்துக் கொள்ளமுடியாது.
எங்களுடைய பெறுமதியான வளத்தை நாம் அடுத்த சந்ததிகளுக்கும் கையளிக்க வேண்டும். அதைவிடுத்து அழித்து விட முடியாது.
இதேபோன்று நாம் 23 கடற்றொழிலாளர்களுக்காக 15ஆயிரம் ஏழை கடற்றொழிலாளர்களை நடு வீதியில் விடவும் முடியாது.
எனவே எங்களுடைய இந்த நல்ல நோக்கத்திற்காக எவ்வாறான எதிர்ப்பு எமக்கு முன்னால் வந்தாலும் அதனைக் கண்டு நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அவர் கூறியிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt5.html

மு.த.தேசிய கட்சியினரின் உண்ணாவிரதம் பேராசிரியர் சிவச்சந்திரனால் முடிவுக்கு வந்தது!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 03:09.46 PM GMT ]
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் யாழ்.நல்லூர் பகுதியில் கடந்த 3 தினங்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்துள்ளார்.
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நல்லூர் பகுதியில் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று அந்தப் பகுதிக்குச் சென்ற பொலிஸார், திருட்டு மின்சாரம் பெற்றார் என குற்றம்சாட்டி இவரை கைது செய்தனர்.
எனினும் மறுநாள் அதிகாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் போராட்டத்தினை அவர் முன்னெடுத்திருந்தார்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்றைய தினம் சென்று தமது ஆதரவினை தெரிவித்திருந்தார்.
இதேபோன்று நல்லை ஆதீன முதல்வரும் இன்றைய தினம் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா அல்லது வாக்குறுதிகள் வழங்கப்பட்டதா?என்பது தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை.
எனினும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதன்போது தமிழரசு கட்சியின் உறுப்பினரும் பேராசிரியருமான இரா.சிவச்சந்திரன் கலந்து கொண்டு உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கி போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt6.html
பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் இரத்தக்களரி ஏற்படும்: தா பாண்டியன்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 03:27.12 PM GMT ] [ பி.பி.சி ]
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததான ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் இருக்கும் சிறைக்கு மாற்றவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா பாண்டியன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அங்கே ஏதாவது சிறு அசம்பாவிதம் நேர்ந்தாலும் அதன்விளைவாக ஏற்கெனவே காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் கடந்தகால கசப்பு மேலும் அதிகரித்து விரும்பத்தகாத விபரீதங்கள் நேரும் என்பதாலேயே தாம் இந்த கோரிக்கையை வைப்பதாக தா பாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இப்படி ஜெயலலிதாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்றுவதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, அதன் மீதான மேல்முறையீடோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் விளக்கமளித்தார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் என்று கைதுசெய்யப்பட்டிருக்கும் பலர், பல ஆண்டுகாலம் கர்நாடக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்பாக இத்தகைய கோரிக்கைகளை வைக்காமல், ஜெயலலிதாவுக்கு மட்டும் இத்தகைய சலுகையை கேட்பது, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு அளவுகோல், அரசியல் செல்வாக்கில்லாத ஏழைகளுக்கு ஒரு அளவுகோல் என்கிற இரட்டை அளவுகோலாக விமர்சிக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, இத்தைய ஒப்பீடே அடிப்படையில் தவறானது, பொருத்தமற்றது என்று நிராகரித்தார் தா பாண்டியன்.
வீரப்பனின் கூட்டாளிகள் என்று தண்டிக்கப்பட்டு கர்நாடக சிறையில் இருப்பவர்கள் கொலைக்குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் ஜெயலலிதாவை அவர்களுடன் ஒப்பிடமுடியாது என்றும் கூறினார் தா பாண்டியன்.
தமிழக மக்களின் அன்பைப்பெற்று தமிழக மக்களின் பிரதிநிதியாக முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா என்றும் அவருக்கு கர்நாடக சிறையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அது அரசியல் விபத்தாக மாறிவிடும் என்றும் இருமாநில மக்களுக்கு இடையிலும் அதனால் ரத்தக்களரி ஏற்படும் என்றும் தா பாண்டியன் அச்சம் வெளியிட்டார்.
வீரப்பன் கூட்டாளிகளுக்கு கர்நாடக சிறைகளில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதனால் எந்தத்தகராறும் எழாது என்றும் விளக்கமளித்தார் தா பாண்டியன்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt7.html

Geen opmerkingen:

Een reactie posten