வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், நலன்புரி முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாணசபையில் எதிர்வரும் 9ம் திகதி நில சுவீகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில் முற்கட்டமாக திரட்டப்ப ட்ட தகவல்களினடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 3மாவட்டங்களில் மேற்படி அளவு நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான அன்டனி ஜெயநாதன் மற்றும், து.ரவிகரன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் 9ம் திகதி மாகாணசபையில் காணி தொடர்பிலான விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில் நாம் தொடர்ச்சியாக நில சுவீகரிப்பு தொடர்பாக தகவல்களை சேகரித்து வருகின்றோம்.
இதற்கமைய முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட தகவல்களினடிப்படையில், மாந்தை கிழக்கு பகுதியி ல் சுமார் 400ஏக்கர், புதுக்குடியிருப்பு பகுதியில் 400 ஏக்கர், மற்றும் கரைதுறைப்பற்கு பகுதியில் வெலி ஓயா 2524ஏக்கர் உட்பட பல இடங்களில் நிலம் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மொத்தமாக 4,349 ஏக்கர்,
ஒட்டுசுட்டான் பகுதியில் ஒதியமலை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் மொத்தமாக 3ஆயிரம் ஏக்கர் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அம்பகாமம் பகுதியில் 8ஆயிரம் ஏக்கர் நிலம் விமானப்படையின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிகின்றோம். அவை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மேலும் மாங்குளம், முறிகண்டி பகுதிகளிலும் பெருமளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அவை தொடர்பான தகவல்களையும் நாங்கள் திரட்டிவருகின்றோம். எனினும் இதுவரை எம்மால் சேகரிக்கப்பட்ட தகவல்களினடிப்படையில் மொத்தமாக ஒட்டுசுட்டான் பகுதியில் மட்டும் 11ஆயிரம் ஏக்கர்,
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்களுடைய நிலங்களை சுவீகரிக்கும் நடவடிக்கையும், ஆக்கிரமிக்கும் நடவடிக்கையும், வழங்கப்பட்ட காணிகளை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடர்கின்றது. எனவே இந்த தகவல்களை முழுமையான தரவுகளுடன் சமர்ப்பிக்கவுள்ளோம். என்றனர்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் திரட்டப்பட்டிருக்கும் நிலம் தொடர்பாக தகவல்கள் குறித்து மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தகவல் தருகையில், வலிகாமம் வடக்கு, வலிமேற்கு, வலி.தென்மேற்கு, அச்சுவேலி, எழுதுமட்டுவாள், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்களுடைய நிலங்களை சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இவை படையினர், கடற்படையினர் ஆகியோரின் தேவைகளுக்காகவே சுவீகரிக்கப்படவுள்ளதாக சுவீகரிப்பு தொடர்பான பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனடிப்படையில் வலி,வடக்கில் 6381ஏக்கர், வடமராட்சி கிழக்கில் 700ஏக்கர் இதில் 250ஏக்கர் வரையிலான நிலம் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் வருகின்றது.
இதனடிப்படையில் மொத்தமாக யாழ்.குடாநாட்டில் 7,167ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படவுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. மேலும் தகவல்களை திரட்டி வருவதுடன், நில த்திற்குச் சொந்தமான மக்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகியோரின் எதிர்ப்பினால், எங்கள் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை பாதுகாத்து வருகின்றோம். என்றார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் நில அபகரிப்பு தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் 5ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
மேலும் அன்புபுரம் பகுதியில் 2ஆயிரம் ஏக்கர், மன்னார் வீதியில் ஆயிரம் ஏக்கர் என மொத்தமா க கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 8ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை விடவும் உதிரிகளாக எடுக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பிலான தகவல்களை சேகரித்து வருகின்றோம். அவற்றையும் மாகாணசபையில் சமர்ப்பிப்போம்.
இதேபோன்று பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 9பரப்பு நிலத்தை படையினருக்கு வழங்கவுள்ளதாக கரைச்சி பிரதேச செயலர் நில உரிமையாளருக்கு கடிதம் மூல மாக அறிவித்துள்ளார். மேலும் அதனை கையளிக்கும் நிகழ்வு 9ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும், பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.
இவ்வாறுதான் வடக்கில் நில ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது தொடர்பிலும் நாங்கள் எதிர்வரும் 9 ம் திகதி விரிவாகப் பேசவுள்ளோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt3.html
Geen opmerkingen:
Een reactie posten