[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:47.24 AM GMT ]
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் இல்லத்தை புனரமைப்பு செய்த விவகாரம் தொடர்பாகவே இவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ இல்லத்துக்கான புனரமைப்பு வேலைகளுக்கான ஒப்பந்தம், டெண்டர் கோரப்படாமல் கையளிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனம் தொடர்பாக தற்போது இலங்கைக்குள் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் இந்த விவகாரம் அரசுக்கு கடும் சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே குறித்த ராஜதந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr5.html
அமெரிக்க நிறுவனமொன்றுடன் கைகோர்க்கும் இலங்கை- பெருந்தொகை பணம் செலவீடு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:01.21 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
லெவிக் என்ற இந்த நிறுவனம், லிபர்ட்டி இன்டர்நெசனல் குரூப் நிறுவனத்தின் உப குத்தகை அடிப்படையில் இலங்கையின் மத்திய வங்கிக்கு உதவவுள்ளது.
இந்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தொடர்புகள் என்ற அடிப்படையில் உதவிகளை வழங்கவுள்ளது.
இதன்மூலம் போரின் பின்னர் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்று இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
இந்த தகவல்களை அமெரிக்க இணையம் ஒன்று நேற்று வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனத்துடன் இலங்கை செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கையின்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2015 ஜூலை வரைக்குமான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் ஆலோசனை வழங்கப்படும்.
இதற்காக மாதாந்தம் 60 ஆயிரம் டொலர்கள் என்ற அடிப்படையில் இலங்கை லெவிக் நிறுவனத்துக்கு செலுத்தவுள்ளது.
ஏற்கனவே இலங்கை, அமெரிக்காவில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்வது உட்பட்ட நோக்கங்களுக்காக 7 நிறுவனங்களுடன் பெருந்தொகை நிதிகளை செலவழித்து உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இலங்கையின் எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr6.html
சில்க் பாதை திட்டம்! இந்தியாவுக்கு பாதிப்பில்லை என்கிறது சீனா
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:50.37 AM GMT ]
சீனாவின் கம்யூனிஷக் கட்சி இதனை தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான சீனாவின் சில்க் பாதை திட்டம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது. அது பாதுகாப்பை மையமாகக் கொண்டது அல்ல என்று சீனாவின் பொதுக்கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளர் லுவான் ஜியான்சங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார்.
எனினும் சில்க் பாதை முனைப்பு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் தமது கரிசனையை காட்டிவருகிறது.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnsy.html
ஜனாதிபதி தலைமையில் வடக்கின் அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:59.33 AM GMT ]
வடக்கிற்கான அதிவேகப் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பை அண்மித்த மஹர பிரதேசத்தல் இருந்து இந்தப் பாதை ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து ரம்புக்கனை வரை செல்லும் பாதை, ரம்புக்கனையில் இருந்து கண்டி அதிவேகப் பாதையாகவும், யாழ். அதிவேகப் பாதையாகவும் இரண்டாகப் பிரியவுள்ளது.
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களில் வடக்கிற்கான அதிவேகப் பாதை செயற்திட்டத்திற்கே ஆகக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக 350 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
குறித்த அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதனை மேற்கொள்வதன் மூலம் வடக்கின் வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் தந்திரோபாயமாகவே அரசாங்கம் அதனைப் பிற்போட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வடக்கு அதிவேகப் பாதையின் நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நடப்படவுள்ளது. குருநாகலை கலகெதர பிரதேசத்தில் ஜனாதிபதி இதனை நட்டு வைப்பார் என்று தெரிய வந்துள்ளது.
கண்டி அதிவேகப் பாதைக்கான அடிக்கல் நவம்பர் 15ம் திகதி ரம்புக்கணையில் நடப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnsz.html
தமிழ் சோலையில் ஆயுத பயிற்சி: கதை விடும் அரசாங்க நாளேடான தினமின
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 03:31.09 AM GMT ]
சிங்கள சமூகத்திற்கு எதிராக இனவாத ரீதியான குரோதத்தை ஏற்படுத்தி அப்பாவி தமிழ் பிள்ளைகளை வன்முறைகளுக்கு உருவாக்கும் 350க்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வலையமைப்பு கண்டறிந்துள்ளது என அரசாங்கத்தின் நாளேடான தினமின பத்திரிகை தெரிவித்துள்ளது.
உலக தமிழர் அமைப்பு, புலம்பெயர் புலிகள் தலைமையிலான புலிகளின் முன்னணி அமைப்பினரால் இந்தப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் பிள்ளைகளை இணைத்து நடத்தப்பட்டு வரும் இந்த பாடசாலை கட்டமைப்பு தமிழ் சோலை என அழைக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் பிள்ளைகளை இணைத்து நடத்தப்பட்டு வரும் இந்த பாடசாலை கட்டமைப்பு தமிழ் சோலை என அழைக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை கற்பிக்கும் போர்வையில், இலங்கையின் சிங்கள மக்கள், சிங்கள கலாச்சாரம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடும் பிரிவினைவாத கொள்கைகளை கற்பித்து, அந்த பிள்ளைகளின் மனத்தை முற்றாக இலங்கை எதிராக செயற்படும் விதமாக எதிராளிகளாக மாற்றுவதே தமிழ் சோலை பாடசாலை கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள புலம்பெயர் தமிழர்கள் தலைமையிலான புலிகளின் முன்னணி அமைப்புகளின் பிரதான நோக்கமாகும்.
இந்த பாடசாலைகளில் 10 முதல் 21 வயதான சுமார் 20 ஆயிரம் பிள்ளைகள் கல்வி கற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்களின் வழமையான பாடசாலை நாட்களுக்கு மேலதிகமாக இந்த பாடசாலை கட்டமைப்பு இயங்கி வருகிறது.
புலிகளின் முன்னணி அமைப்புகளில் அடங்கும் உலக தமிழர் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வு கழகம் தலைமையிலான பல அமைப்புகள் இந்த பாடசாலை கட்டமைப்பை நடத்தி வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளின் பார்வையில் சிக்காதபடி மேல் மட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது போல் காட்டிக் கொண்டு அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள், தற்கொலை குண்டுதாரியாக மாறுவது, இலங்கை எதிராக சதித்திட்டங்களை மேற்கொள்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் பயங்கரவாதிகளின் தோல்வியின் பின்னர், இந்த பாடசாலைகள் ஊடாக புலிகளின் நோக்கம் மேலும் பாரதூரமான வகையில் செயற்படுத்தப்பட ஆரம்பித்துள்ளது.
அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி முறைகள் போன்ற நாட்டின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் செய்யும் பல பணிகளை திரிபுப்படுத்தி காண்பிக்கும் தமிழ்ச் சோலை பாடசாலைகள், ஈழம் மற்றும் பரந்துப்பட்ட ஈழம் தொடர்பான கனவுகளை மாணவர்களின் மனதில் விதைத்து, அதன் ஊடாக எதிர்காலத்தில் அவர்கள் இலங்கை எதிராக செயற்படும் நிலைமைக்கு மாற்றியுள்ளன.
புலிகளின் முன்னணி அமைப்புகள் தலைமையிலான புலம்பெயர்ந்தோர், .இந்த மாபெரும் குற்ற எண்ணக்கருவை பிள்ளைகளின் மனதில் விதைத்து, அவர்களின் மனத்தை மாற்றுவதுமல்லாமல், அந்த பிள்ளைகளின் பெற்றோரிடம் பணத்தை அறவிட்டு வருமானத்தை உழைத்தும் வருகின்றன.
இந்த பாடசாலைகள் புலிகளின் தலைவர் பிரபாகரனின் எண்ணக்கருவில் 1990 ஆம் ஆண்டில் உருவானது.
பிரபாகரன், அனாதை இல்லங்களை நடத்தும் விதத்தில் சாதாரண பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று செஞ்சோலை உள்ளிட்ட பெயர்களில் பாடசாலைகளை நடத்தி வந்தார்.
அங்கு சிங்கள மக்களுக்கு எதிராக பிள்ளை கூட்டம் ஒன்றை உருவாக்கி பின்னர் அவர்கள் போரில் இணைக்கப்பட்டனர்.
சிங்கள மக்களை அழிக்கும் தற்கொலை குண்டுதாரியாக மாறுவது வீர செயல் என தமிழ் சோலை பாடசாலைகள் கற்பித்து வருகின்றன.
இவற்றில் பயின்ற பிள்ளை பின்னாளில் இலங்கைக்கு வந்து பயங்கரவாத யுத்தம் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் உதவியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு மனம் திரிபு படுத்தப்பட்ட தமிழ் சோலை மாணவர்களே 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை இவ்வாறு இரகசியமான முறையில் கொடிய குற்றவாளிகளாக மாற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரியவந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்கு விதித்திருந்த தடையை நீக்கியது ஆச்சரியமானது என சுட்டிக்காட்டியுள்ள பிரிகேடியர் வணிகசூரிய,
மூன்று மாத காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை பின்னர் ஆராய்ந்து பார்த்து மீண்டும் அந்த தடையை நிரந்தரமாக அமுல்படுத்தும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புலம்பெயர் புலிகள் இந்த தடை நீக்கத்தை பயன்படுத்தி அவர்களின் செயற்பாடுகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எவ்வாறாயினும் எந்த விதத்திலும் புலிப் பயங்கரவாதிகள் இலங்கையில் மீண்டும் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதபடி சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXns0.html
Geen opmerkingen:
Een reactie posten