தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?

கொட்டாவ பிரதேச இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 02:51.20 AM GMT ]
மேல் மாகாணம் கொட்டாவ,  மத்தேகொட இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெடிப்புச் சம்பவம் காரணமாக முகாமில் தீப்பற்றிக்கொண்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சேத விபரங்கள் பற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மத்தேகொட இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ குறித்து விசாரிக்குமாறு இராணுவத் தளபதி உத்தரவு
இலங்கை இராணுவத்தின் 5வது பொறியியல் படைப் பிரிவுக்கு சொந்தமான மத்தேகொடவில் உள்ள முகாமில் வெடி பொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் தயா ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்கும் பணியில் கோட்டை மற்றும் தெஹிவளை பிரதேசங்களை சேர்ந்த தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.
விசாரணைகளின் பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVft2.html
ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 03:49.51 AM GMT ]
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர்.
கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும் சிறைக்கு மாற்ற முடியும்.
எனவே அந்த அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவது தொடர்பான சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டனவாம். ஜெயலலிதாவின் சம்மதத்திற்காக தற்போது அதிமுக தரப்பு காத்துக் கொண்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பின் கீ்ழ் உள்ளவர்.
மூட்டு வலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவர் தொடர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர். எனவே இதைக் காரணம் காட்டி சிறை மாற்றத்திற்கு அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVft4.html

Geen opmerkingen:

Een reactie posten