சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த செந்தில்குமார் சுதர்ஷனை உடனடியாக விடுவிக்க கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்றது.
செந்தில்குமார் சுதர்ஷன் என்ற மாணவனை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்று 50 நாட்களுக்கும் மேல் கடந்துள்ளது.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVft7.html
Geen opmerkingen:
Een reactie posten