அம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்தில் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போன மூன்று வயதான சிறுவன், தம்புள்ளையிலுள்ள பிச்சைக்காரரிடமிருந்து நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், அக்குரஸையை வசிப்பிடமாக கொண்ட தனது ஆச்சியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்னு ஆச்சி தனது பேரனுடன் அம்பலங் கொடையிலுள்ள பஸ் தரிப்பிடத்துக்கு சென்றபோதே குறித்த யாசகர், ஆச்சியை ஏமாற்றி சிறுவனை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேரனை இழந்த ஆச்சி, பேரனுடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகித்துள்ளார்.
சிறுவனின் தாய், வேலைவாய்ப்பு தேடி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten