[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 02:36.38 AM GMT ]
முதலாம் வகுப்புக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக மூன்று இலட்சம் ரூபாவை லஞ்சமாக பெற்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதலாம் ஆண்டுக்கு சேர்க்கப்பட்ட மாணவரின் சகோதரர் லபுதுவ கல்லூரியில் பயின்ற போதும் அதிபர் பெற்றோரிடம் லஞ்சத்தை பெற்றுள்ளார்.
இது குறித்து இலங்கையின் ஊடகம் ஒன்றிடம், பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்து ஊடகம், கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அறிவித்த நிலையிலேயே அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பெண் அதிகாரி ஒருவர் குறித்த மாணவரின் தந்தையுடன் கல்லூரிக்கு சென்று அதிபரிடம் அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளனர்.
அதனை அதிபர் பெற்றுக்கொள்ளும் போதே அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmwz.html
இலங்கைக்கு எதிரான ஐ.நா விசாரணைக்கு பிரித்தானியா வலுவான ஆதரவு
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 02:28.16 AM GMT ]
பிரித்தானியாவின் உதவி வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி இந்த உறுதிமொழியை நேற்று தம்மை சந்தித்த புலம்பெயர் தமிழர்களிடம் அளித்துள்ளார்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவையும் மற்றும் சில தமிழ் அமைப்புக்களும் இணைந்து நேற்று ஸ்வைரியை சந்தித்தன.
இதன்போது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த ஸ்வைரி இலங்கையின் இறுதி சமாதானத்துக்காக தமது நாடு பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmwy.html
Geen opmerkingen:
Een reactie posten