தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

மோடியை விரைவில் சந்தித்து 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்! பொதுபல சேனா தேரர்!

தேசிய தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஆணையாளர் துணைத் தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவிப்பு- ஜனாதிபதி தேர்தல் 2015 மார்ச்சில்?
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 01:24.19 AM GMT ]
தேசிய தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, துணைத் தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தேசிய தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்ளளுமாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அனைத்து துணைத் தேர்தல் ஆணையாளர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் துணைத் தேர்தல் ஆணையாளரை சந்தித்த தேர்தல் ஆணையாளர் தேசிய தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு தேவையான முதல் கட்ட பணிகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு குறித்த பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்யுமாறு கோரியுள்ளார்.
தேசிய தேர்தல் ஒன்றின் போது எதிர்நோக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
எனினும் தேர்தல் நடாத்துவது குறித்து தேர்தல் ஆணையாளரோ திணைக்களமோ உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறும்?
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015 மார்ச் மாதத்திலேயே நடத்தப்படும் என்று புதிய தகவல் ஒன்றை அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஆரசியல் தரப்புக்களை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஜனவரியில் நிகழ்கிறது.
எனவே அந்த மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது சாத்தியமாகாது என்ற அடிப்படையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வழமையாக வருடந்தோறும் நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பபட்டு டிசம்பரில் நிறைவுப்படுத்தப்படும் வரவு செலவுத்திட்டம், இந்த தடவை ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்டு நவம்பர் 18 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmv5.html
பௌத்த பிக்குகள் அரசியல் ரீதியாக பிரிந்து செயற்படுவது பாதகமானது!– பிரதமர்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 01:26.51 AM GMT ]
பௌத்த பிக்குகள் அரசியல் ரீதயிhக பிளவடைந்து செயற்படுவது பாதகமான நிலைமையை உருவாக்கும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் அனுராதபுரம் கரப்பனே படிகொட்டுவாவ விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பௌத்த பிக்குகள் பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் பௌத்த மதத்திற்கு பாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டை பாதுகாப்பதற்கு நாட்டுக்கு தலைமை தாங்கியவர்கள் பௌத்த பிக்குகளேயாகும்.
எந்தவொரு காலத்திலும் சந்தேகத்துடன் அவர்கள் செயற்படவில்லை.
தாய்நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த பௌத்த பிக்குகள் இருந்தார்கள்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு பிக்குகளுக்கு இடையில் ஒற்றுமையை மேம்படுத்துவது அவசியமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmv6.html
மோடியை விரைவில் சந்தித்து 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்! பொதுபல சேனா தேரர்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 01:32.28 AM GMT ]
தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார். எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம். இவ்வாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பு - கிருலப்பனையில் அமைந்துள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை.
இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றன.
ஐக்கியத் தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர் ரணில் என்றும் பிறகு சோபித தேரர் என்றும் மாறி மாறி ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தக் கட்சிக்கும் இதுவிடயத்தில் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில், எமக்கு நாட்டில் வாழுகின்ற சிங்கள - பெளத்த மக்களில் இருப்பே முக்கியமாகும். இவர்களைப் பாதுகாத்து இவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது ஒரே நோக்கமாகும்.
இதற்கெல்லாம் இணங்கக்கூடிய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவாராயின் எமது ஆதரவை நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்போம்.
இதேநேரத்தில், ஐக்கியத் தேசியக் கட்சியும் வீதி சமிக்ஞை விளக்கைப்போல வேட்பாளரை நொடிக்கு நொடி மாற்றிக் கொண்டிருக்காது மிக விரைவில் தங்கள் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவாக அறிவித்தால் எமது நிலைப்பாட்டையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.
பொதுபலசேனா அமைப்பானது அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் எதிரானது அல்ல. ஆனால், ஒன்றுக்கும் உதவாத - சிலரின் சுயலாபத்திற்காக கொண்டுவரப்பட்ட இந்த 13 ஆவது திருத்தத்திற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தொடர்பிலான ஆரோக்கியமான அணுகுமுறையைக் கையாள்கிறார். இதனை வரவேற்கின்றோம். ஆனால், தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார்.
எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம். இதன்போது பயனற்ற 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்துவோம் என்றார்
http://www.tamilwin.com/show-RUmszATcKWmv7.html

Geen opmerkingen:

Een reactie posten