தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

மீனவர் பிரச்சனை: பன்னீரும் கடிதம்!

கிணற்றுத் தவளையாகிவிட்ட ஜனாதிபதி குடும்பம்: ஹெல உறுமய
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:16.39 AM GMT ]
நாட்டில் தற்போது குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,&n
அரசாங்கத்தின் அமைச்சுக்களில் அதிகளவான அமைச்சுக்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவிற்கும்மிடையில் பகிரப்பட்டுள்ளது.
ஏனைய அமைச்சுகள் வெறுமையான அமைச்சுக்கள் என்ற நிலையிலேயே இருக்கின்றது.
அரசியல் அமைப்பின் 57வது பிரிவின் படி ஜனாதிபதி, நிதி அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியும். எனினும் அந்த அமைச்சை ஜனாதிபதி தனது பொறுப்பில் வைத்து கொண்டு அரசியல் அமைப்பிற்கு எதிராகவே செற்படுகின்றார்.
நாட்டின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் 75 வீதமான நிதியை கையாளும் பொறுப்பை ஜனாதிபதி தன் கையில் வைத்துள்ளார். இந்த நிதி முழுதும் துறைமுகம், வீதி நிர்மாணத்திற்கே செலவு செய்யப்படுகின்றது.
தனி நபர் கையில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதால், நாட்டில் ஊழல், நீதி, ஜனநாயகம், தேர்தல் முதலானவற்றில் தலையீடுகள் அதிகரித்து நாடு சீரழிந்து வருகின்றது.
நாங்கள் இது சம்பந்தமாக தொடர்ச்சியாக சமர்ப்பித்து வரும் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால் மாற்றுவழியை நாடவேண்டிய சூழ்நிலை உருவாகும் அதிகார மயக்கத்தில் இப்பொழுது அரசு தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது.
ஜனாதிபதியை சுற்றியிருக்கும் பரிவாரங்கள் காரணமாகவே ஜனாதிபதியினால், மக்களின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றது என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfp1.html

ஹம்பாந்தோட்டையில் மான் இறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்பனை
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:32.52 AM GMT ]
ஹம்பாந்தோட்டையில் மான் இறைச்சியுடன் கலந்து நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதை வனப்பாதுகாப்புத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
ஜனாதிபதியின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டைப் பிரதேசம் வரட்சிக்குப் பெயர் போன பகுதியாகும்.
தற்போது அங்கு நிலவும் கடும் வரட்சி காரணமாக குடி தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதுடன், நீர் நிலைகளும் வற்றியுள்ளன.
இந்நிலையில் நீரைத் தேடி வரும் மான் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்துவரும் நடவடிக்கையில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.
இவர்கள் அதிக வருமானம் ஈட்டும் மான் இறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்து நோக்கில் வருவதாக வனத்துறையினருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஹம்பாந்தோட்டை தம்மென்னாவை குளக்கரையோரம் அவ்வாறு இறைச்சிக்காக கொல்லப்பட்ட நாய்களின் தலைகள் மற்றும் கால் பகுதிகளை வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இதற்கிடையே சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் மான் இறைச்சியில் நாய் இறைச்சியைக் கலந்து விற்பனை செய்தல் என்பவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் வனத்துறையினர் ஆளுங்கட்சியினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfp2.html
மீனவர் பிரச்சனை: பன்னீரும் கடிதம்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:36.28 AM GMT ]
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும், 75 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கடந்த செப்ரெம்பர் 27ஆம் திகதி பிடிக்கப்பட்ட 4 மீனவர்கள் மற்றும் நேற்று அதிகாலை 4 படகுகளுடன் பிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் என 20 பேர் இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
6 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்களில் 72 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
ஆனால் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. தங்களது சீரிய தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் உதவியால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 71 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு இன்னும் விடுவிக்கவில்லை. அவை மழையின் காரணமாக உபயோகமற்றதாகி விடும். எனவே மேலும் சேதமடைந்து பழுதடைவதை தடுக்க விரைவில் தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே அவற்றை விடுவிக்க வேண்டும்.
கடந்த மாதம் 27ம் திகதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பயணம் செய்த படகு தொழில் நுட்ப கோளாறு காரணமாக காற்று மற்றும் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர். 28ம் திகதி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை காங்கேசன் துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 29ம் திகதி கய்ட்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை வருகிற 10ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் என்ற மற்றொரு தகவலையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 29ம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து 4 படகுகளில் 16 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 30ம் திகதி அதிகாலையில் இவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றது.
தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்க பாரம்பரிய உரிமைகள் இருந்தும் இலங்கை கடற்படையினரால் அவர்களுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது என அக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfp3.html

Geen opmerkingen:

Een reactie posten