[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:05.00 AM GMT ]
சிவில் செயற்பாடுகளை அடக்கும் அணிகலனாக இன்றைய அரசாங்கம் பொலிசாரை பயன்படுத்தி வருகிறது எனவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நீர்கொழும்பு குடாபாடு பிரதேசத்தில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி கருத்தரங்கொன்றுக்கு பொலிசார் ஏற்படுத்திய தடை சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் இதனை கூறியுள்ளது.
யாரோ ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்ற சாதாரணமாக பயன்படுத்தும் விளக்கத்தை பயன்படுத்தி பொலிஸார் கருத்தரங்கு நடத்தப்படவிருந்த ஹொட்டல் உரிமையாளருக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி அதனை இரத்துச் செய்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையானது அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் செயல் எனவும் தொழிசார் இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfpy.html
பிரதமர் மோடி, ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:08.58 AM GMT ]
ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் சார்பில், நாளையே ( இன்று) விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உட்பட 4 பேரின் மனுக்களுக்கும் இதே நிலைதான் இருந்தது.
இன்று காலை 10.30 மணிக்கு இந்த மனு விசாரணை வந்தது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உட்பட இரு தரப்பு வழக்கறிஞர்களும் விசாரணைக்கு தயாராக இருந்தனர். ஆனால், இந்த மனுவை நீதிபதி விசாரணை செய்ய மறுத்தார்.
இது குறித்து ராம் ஜெத்மலானி, வழக்கை விசாரிக்காமலேயே நீதிபதி ஒத்திவைத்துவிட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfp0.html
கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் மோடி: மஹிந்த தெரிவிப்பு
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 07:06.54 AM GMT ]
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த போது இந்தியப் பிரதமரை சந்தித்துப் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்புக் குறித்து அமைச்சரவையில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு மட்டுமே என்னிடம் தெரிவித்தார். அத்துடன் பேச்சுக்காக விசேட பிரதிநிதியை இந்தியா நியமிக்க வேண்டும் என்ற கூட்டமைப்பினரின் கோரிக்கையைத் தான் நிராகரித்திருந்தார் என்பதையும் மோடி எனக்குத் தெளிவுபடுத்தினார் என தெரிவித்தார்.
மேலும் இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு விரோதமாக செயற்படாது எனவும் மோடி தன்னிடம் உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfpz.html
Geen opmerkingen:
Een reactie posten