தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளா ?: தவராசா விசனம் !

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, மேல் நீதிமன்றில் வாதிட்டார்.யாழ். அச்சுவேலி வடக்கு அச்சுவேலியை பிறப்பிடமாகக் ;கொண்டவரும் வடமராச்சி கிழக்கு மருதங்கேனியில் கிராம சேவை உத்தியோகத்தராக கடமைபுரிந்த நாகலிங்கம் மதனசேகர் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு வாதிட்டார்.
2008ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் மாதம் 16ஆம் திகதி, கொழும்பு புறக்கோட்டையில் WP ணா- 3656 என்ற இலக்கமுடைய பஸ் வண்டிக்கு குண்டு வைத்து அதில் பிரயாணம் செய்த பயணிகளை கொலை செய்வதற்கு எத்தனிதமை, அசையும் அசையா ஆதனமொன்றிற்கு இழப்பை ஏற்படுத்தி அதனை அழித்தவிடும் செயலை புரிந்ததாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அவசரகால ஒழுங்கு விதிகளின் 25(1)ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்ததாக 13 தடயப்பொருட்களையும் 36 அரசசாட்சியங்களையும் உள்ளடக்கி சட்டமா அதிபரினால் இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் 23ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
http://www.athirvu.com/newsdetail/1143.html

Geen opmerkingen:

Een reactie posten