மோதிரத்தை அடைவு கடையில் மீட்க்கச் சென்ற பெண் மாயமாக மறைந்தார் !
[ Oct 04, 2014 05:01:05 PM | வாசித்தோர் : 3045 ]
இதுபற்றி ஏற்கெனவே வாகரைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தங்கநாயகம் மேலும் தெரிவித்தார்.
கந்தசாமி நிரோஜினி (வயது 20) என்ற தனது மகள் செப்டெம்பர் 22 ஆம் திகதி, அடகு வைத்துள்ள மோதிரம் ஒன்றை அடகு மீட்பதற்காக வாகரை மக்கள் வங்கிக்குச் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என்று தாய் கந்தசாமி தங்கநாயகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தனது மகள் காணாமல்போன பின்னர் ஆறு அலைபேசி இலக்கங்களில் இருந்து நபர்கள் தொடர்பு கொண்டு தெளிவற்ற முறையில் பேசுவதாகவும் காணமல்போன யுவதின் தாய் கூறினார்.
அதிலொரு நபர் தான் யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து பேசுவதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என்று யுவதியின் தாய் மேலும் கூறினார். இன்னொருநபர் தான் கொழும்பிலிருந்து பேசுவதாகக் கூறியதாகவும் தாய் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு சம்பந்தமாக தாங்கள் விசாரணைகளை நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/1144.htmlகடைசியாக குட்டு வெளிப்பட்டது: மறைக்க நினைத்த விடையம் பூதாகரமாம மாறியுள்ளது !
[ Oct 04, 2014 05:06:33 PM | வாசித்தோர் : 5625 ]
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி கிரிஸ் நோனிஸ் மீது நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பியுமான வாஸ் குணவர்தன தாக்குதல் நடத்தியதாக அவர், முறையிட்டுள்ளதுடன் தனது இராஜினாமா கடிதத்தையும் கையளித்திருந்தார்.
இதேவேளை, தங்கள் இருவரும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ள சஜின் வாஸ் குணவர்தன எம்.பி, பிரித்தானியாவுக்கான தூதுவரை தான் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.athirvu.com/newsdetail/1145.htmlநியூயோர்கில் வைத்து என்னை கேவலமாக அடித்தார்கள்: வெளியானது ஆடியோ ஆதாரம் !
[ Oct 04, 2014 05:42:05 PM | வாசித்தோர் : 7345 ]
கடந்த 24ம் திகதி அதிகாலை, நியூயோர்க் நகரில் வைத்து, நடந்த தண்ணி பார்டியில் ஒன்றில் வெறி உச்சத்திற்கு ஏற இலங்கைத் தூதுவரை சஜின் வாஸ் தாக்கியுள்ளார். பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸை, இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளராக இருக்கும் சஜின் தாக்கினார். காலால் போட்டு மிதித்துள்ளார். இச்செய்தியை தமிழ் இணையப்பரப்பில் முதன் முதலாக அதிர்வு இணையமே வெளியிட்டது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், மேலும் இச்செய்தியை இருட்டடிப்புச் செய்யவும் மகிந்தர் அலுவலகம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இதுதொடர்பான செய்திகள் சிங்கள இணையங்களிலும் வெளியாக ஆரம்பித்து விட்டது.
இன்று காலை (லண்டன் நேரப்படி) , தற்போது லண்டனில் தங்கியுள்ள கிறிஸ் நோனிஸ் ஒரு ஆங்கில இணையத்திற்கு நேர்காணலை வழங்கியுள்ளார். அதில் அவர் தன்னை கேவலாமாக அடித்தார்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கான ஆடியோவை நாம் இங்கே இணைத்துள்ளோம். இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி பிரசுரிப்பதால் தான் 2012ம் ஆண்டு மகிந்தர் அதிர்வு இணையத்தை இலங்கையில் தடைசெய்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்கிவரும் சுமார் 3 இணையங்கள் இலங்கையில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதில் அதிர்வு, தமிழ் நெட், மற்றும் லங்காவெப் நியூஸ் ஆகிய இணையங்ள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1146.html
Geen opmerkingen:
Een reactie posten