தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு புலி ஆதரவு அமைப்புக்கள் பிரிட்டனிடம் கோரிக்கை!

ப்ரீஜெயக்குமாரி அமைப்பின் ஏற்பாட்டாளர் மீது தாக்குதல்!
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 12:27.14 AM GMT ]
வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் ஜி தேவராஜா நேற்று மாலை 6 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டார்.
நெடுங்கேணியில் உள்ள தமது கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ப்ரீஜெயக்குமாரி அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதியன்று வவுனியாவில் நடைபெறவுள்ள கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி என்ற பெண்ணை விடுதலை செய்யக்கோரும் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்னரே அவர் தமது கடைக்கு சென்றார்.
இந்தநிலையில் அவர் கடையில் இருந்து திரும்பும் போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்போது தாம் கொலை செய்வோம் என்று தேவராஜாவை தாக்குதல் நடத்தியவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்தநிலையில் அவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2ம் இணைப்பு
இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கானார் வவுனியா பிரஜைகள் குழு தலைவர்
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் தேவராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுங்கேணிப் பகுதிக்கு தனது பணி நிமிர்த்தம் சென்றுவிட்டு வவுனியாவிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது நெடுங்கேணி இராணுவ முகாமிற்கு 300 மீற்றர் தூரத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரும்புக் கம்பிகளால் இவருடைய தலைப்பகுதியில் தாக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 10ம் திகதி வவுனியா நீதிமன்றம் முன்பாக அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குழுவின் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறித்த போராட்டத்தை குழப்பியடிக்கும் முயற்சியாகும். அத்துடன் ஏனையவர்களுக்கும் அச்சத்தை உருவாக்கி அவர்களையும் பங்கு கொள்ள விடாது தடுப்பதற்கே இந்த சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்தை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlr5.html
குமார் குணரட்னத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முன்னணி சோசலிச கட்சி செலுத்தவுள்ளது
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 11:43.44 PM GMT ]
முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக கருதப்படும் குமார் குணரட்னத்திற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்தை கட்சி இன்று செலுத்த உள்ளது.
நாட்டின் வீசா சட்டங்களை மீறியதாக குமார் குணரட்னத்திற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னதாக அபராதம் விதித்திருந்தது.
அபராதப் பணத்தை செலுத்தியதன் பின்னர் குமர் குணரட்னத்திற்கு மீண்டும் இலங்கை விஜயம் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
39100 ரூபா அபராதப் பணத்தை செலுத்த நேற்று முன்தினம் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு சென்றோம்
ஆவணங்களை தாரிக்க கால அவகாசம் தேவையென திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இன்று அபராதப் பணத்தை செலுத்த உள்ளோம்.
குமார் குணரட்னம் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி நொயல் முதலீகே என்ற அவுஸ்திரேலிய கடவுச் சீட்டின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்தார்.
2012 ஏப்ரல் மாதம் 6ம் திகதி குமார் குணரட்னம் மற்றும் முன்னணி சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குணரட்னம், அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இதேவேளை, அபராதப் பணத்தைச் செலுத்தினால் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும் என முன்னணி சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlr2.html

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு புலி ஆதரவு அமைப்புக்கள் பிரிட்டனிடம் கோரிக்கை
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 11:31.23 PM GMT ]
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நான்கு அமைப்புக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வாயரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ் போரம், தமிழ்ஸ் எகனைஸ்ட் ஜினோசயிட், பிரிட்டிஸ் தமிழ்ஸ் மற்றும் தமிழ்ஸ் போ லெட்டர் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு கோரியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், படையதிகாரிகள் பிரிட்டனுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் படையதிகாரிகளின் சொhத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளன.
30 புலி ஆதரவு அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளமை குறித்தும் நான்கு புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளன என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlr1.html

Geen opmerkingen:

Een reactie posten